நான்காம் பெனடிக்ட் (திருத்தந்தை)
திருத்தந்தை நான்காம் பெனடிக்ட் | |
---|---|
ஆட்சி துவக்கம் | 1 பெப்ரவரி 900 |
ஆட்சி முடிவு | ஜூலை 903 |
முன்னிருந்தவர் | ஒன்பதாம் யோவான் |
பின்வந்தவர் | ஐந்தாம் லியோ |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | ??? உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் |
இறப்பு | ஜூலை 903 உரோமை நகரம் |
பெனடிக்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை நான்காம் பெனடிக்ட் (இலத்தீன்: Benedictus IV; இறப்பு ஜூலை 903) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 1 பெப்ரவரி 900 முதல் 903இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார்.[1][2] உரோமையரான மாமலுஸ்ஸின் மகன் இவர். இவருக்கு முன் ஆட்சி செய்தவர் திருத்தந்தை ஒன்பதாம் யோவான் (898–900) ஆவார். இவருக்குப்பின் திருத்தந்தை ஐந்தாம் லியோ (903) ஆட்சி செய்தார்.
திருத்தந்தை ஆறாம் ஸ்தேவான் குறித்த திருத்தந்தை ஃபொர்மோசுஸின் ஆணைகளை இவர் உறுதி செய்தார். 901இல் காரோலிஜியன் அரசர்கள் காணாமல் போனப்பின் திருத்தந்தை மூன்றாம் லியோவின் எடுத்துக்காட்டின்படியே இவர் பிராவின்சின் லூயிசினை புனித உரோமை பேரரசராக முடிசூட்டினார். ரெயிம்சு நகரின் பேராயரை கொலை செய்ததற்காக ஃபெலான்டர்சின் இரண்டாம் பால்டுவினை இவர் திருச்சபையினை விட்டு விலக்கினார்.
903இன் கோடைகாலத்தில் உரோமையில் இவர் இறந்தார். இவர் புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pope Benedict IV". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ Platina, Bartolomeo (1479), The Lives of the Popes From The Time Of Our Saviour Jesus Christ to the Accession of Gregory VII, vol. I, London: Griffith Farran & Co., pp. 241–242, பார்க்கப்பட்ட நாள் 2013-04-25