மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருத்தந்தை
மூன்றாம் அலெக்சாண்டர்
Pope Alexander III.jpg
திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர்
ஆட்சி துவக்கம்7 செப்டம்பர் 1159
ஆட்சி முடிவு30 ஆகஸ்ட் 1181
முன்னிருந்தவர்நான்காம் ஏட்ரியன்
பின்வந்தவர்மூன்றாம் லூசியஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்Roland of Siena
பிறப்புc. 1100/1105
Siena, புனித உரோமைப் பேரரசு
இறப்பு30 ஆகத்து 1181(1181-08-30)
Civita Castellana, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு
அலெக்சாண்டர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர் (சுமார் 1100/1105 – 30 ஆகஸ்ட் 1181), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 7 செப்டம்பர் 1159 முதல் 1181இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். நோட்ரே டேம் டி பாரிஸ் பேராலயத்தின் அடிக்கல்லை நாட்டியவர் இவர் என்பது குறிக்கத்தக்கது.

இவர் இத்தாலியின் சியென்னா நகரில் ரோனால்தோ [1] பிறந்தார். ஒரு பொது நிலையினராக, சியென்ன பல்கலைக்கழகத்தில் சட்டம் கற்றுக் கொடுதார், 1150-ல் திருத்தந்தை மூன்றாம் யூஜினால் உரோமைக்கு அழைக்கப்பட்டார் பாப்பு அதிரியான் காலத்தில், பேரரசன் பார்ப்ரோவுக்கு எதிராகத் துணிந்து நின்றரார் இவர். பாப்பு அதிரியான் இறந்ததும் பேரரசனுக்குச் சார்பாக பாப்புவை தேர்ந்தெடுக்குமாறு கையூட்டு கொடுத்தான், அதற்கு மூன்று கர்தினாக்கள் மயங்கினர். அந்த மூவர் தவிர மற்ற 22 கர்தினால்கள் கூடி 1159 செப்டம்பர் 7-ல் கர்தினால் ஆர்லென்டோவை புதிய பாப்புவாக தேர்தெடுத்தனர், மூன்றாம் அலெக்சாண்டர் என்று பெயர் சூட்டிகொண்டார். கையூட்டு பெற்ற மூன்று கர்தினால்கள் தங்களை எதிர்பாப்புவாக்கி கொண்டு நான்காம் விக்டர் என்று அழைத்தனர். இரு ஆட்சிக்குள் குறுக்கிட்டு பாப்புக்களை சமரசப்படுத்த முயன்றான் பார்பரோசா, பாப்பு நகரைவிட்டு வெளியேறி பேரரசனையும், எதிர்பாப்புவையும் திருச்சபைக்கு புறம்பாக்கி ஆணை வெளியிட்டார். அதன்பின் மூன்றாம் பாஸ்கல், மூன்றாம் கலிஸ்டஸ், மூன்றாம் இன்னோனசென்ட், போன்ற எதிர்பாப்புகள் உருவாகினர் 1176-ல் நடைபெற்ற போரில் தோல்வியடைந்து பாப்புவின் முன் சரணடைந்தான் பேரரசன் பார்பரோசா.அதன் பின் அரசர் ஹென்றியுடன் சமரச உடன்படிக்கை செய்து இழந்த உரிமைகளை மீட்டுக் கொடுத்து திருச்சபைக்கு புத்துயிர் ஊட்டினார்.

1179 ம் ஆண்டு லாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார், பாப்புவின் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குப் பெறவேண்டும் மென்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. 1189 ஆகஸ்ட் 3ம் நாள் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. இத்தாலியத்தில் ரோனால்தோ/Rolando அல்லது ஆர்லெண்டோ/Orlando.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
நான்காம் ஏட்ரியன்
திருத்தந்தை
1159–81
பின்னர்
மூன்றாம் லூசியஸ்