நான்காம் கிரகோரி (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நான்காம் கிரகோரி (Gregory IV) 827-844 காலகட்டத்தில் திருத்தந்தையாக இருந்தவர்.

கல்வித்திறன் இறைப்பற்றுதல் காரணமாக இளம் வயதிலேயே கிரகோரியை திருநிலைப்படுத்தினார் திருத்தந்தை பாஸ்கல். இவர்தான் கிரகோரியை கர்தினாலாக உயர்த்தி புனித மாற்கு பசிலிக்காவின் அதிபராக்கினார். கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்ப்ட்டபோது அதனை ஏற்க மறுத்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு கி.பி 828 மார்ச் 8 ல் பதவியேற்றார் 16 ஆண்டுகள் பாப்புவாக பணி புரிந்தார்.

அப்போது முஸ்லிமகள் முகமதியர் சிசிலி நகரை ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் உரோமைக்குள்ளும் வந்து விடுவார்கள் என்ற அச்சத்துடன் திரு நகர் சுற்று சுவர்களை மராமத்துப் பணி செய்தார். இவரது காலத்தில்தான் முதன் முறையாக ”அனைத்துப் புனிதர்களின் விழா” நவம்பர் முதல் நாளில் சிறப்பிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. கிரகோரி கி.பி 844 ல் இறந்தார்.