இரண்டாம் ஆதேயோதாத்துஸ் (திருத்தந்தை)
Jump to navigation
Jump to search
புனித இரண்டாம் ஆதேயோதாத்துஸ் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | ஏப்ரல் 11, 672 |
ஆட்சி முடிவு | ஜூன் 17, 676 |
முன்னிருந்தவர் | வித்தாலியன் |
பின்வந்தவர் | டோனுஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | ??? உரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு |
இறப்பு | சூன் 17, 676 உரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு |
ஆதேயோதாத்துஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை புனித இரண்டாம் ஆதேயோதாத்துஸ் அல்லது திருத்தந்தை புனித தேயோதாத்துஸ் கத்தோலிக்க திருச்சபையில் திருத்தந்தையாக ஏப்ரல் 11, 672 முதல் ஜூன் 17, 676 வரை இருந்தவர் ஆவார். இவரைப்பற்றி மிகக் குறைவாகவே தெரிந்துள்ளது. இவரைப்பற்றிய சில ஆவணங்களும் இவரை ஏழைகளிடமும் வறியவரிடமும் மிகுந்த இரக்கத்துடன் இருந்தார் எனப் போற்றுகின்றது.
இவரின் பிறப்பிடம் உரோமை நகரம் ஆகும். இவர் ஆசீர்வாதப்பர் சபைத் துறவி ஆவார். இவர் மட ஒழுங்குகளிலும் தப்பறைக் கொள்கைகளை அடக்குவதிலும் ஆர்வம் உள்ளவர்.
இவர் நான்கு வருடம் ஆட்சி செய்திருப்பினும், வயது முதிர்வு காரணமாக பெரிய செயல்களைச் செய்ய இயலவில்லை.
முதலாம் ஆதேயோதாத்துஸ், தேயோதாத்துஸ் என்று இடம் பெறும் பட்டியல்களில் இவர் திருத்தந்தை புனித ஆதேயோதாத்துஸ் (பெயர் விகுதி இல்லாமல்) இடம் பெறுவார்.
மேற்கோள்கள்[தொகு]
"Pope St. Adeodatus" in the 1913 Catholic Encyclopedia.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் | ||
---|---|---|
முன்னர் வித்தாலியன் |
திருத்தந்தை 672–676 |
பின்னர் டோனுஸ் |