இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டாம் அகாப்பெட்டஸ்
Pope Agapetus II.jpg
ஆட்சி துவக்கம்மே 10, 946
ஆட்சி முடிவுநவம்பர் 8, 955
முன்னிருந்தவர்இரண்டாம் மரீனுஸ்
பின்வந்தவர்பன்னிரண்டாம் யோவான்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
உரோமை நகரம், இத்தாலி
இறப்புநவம்பர் 8, 955
உரோமை நகரம், இத்தாலி
குடியுரிமைஉரோமன்
அகாப்பெட்டஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை இரண்டாம் அகாப்பெட்டஸ் (பிறப்பு: உரோமை நகரம்; இறப்பு: சுமார் நவம்பர் 955) கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக மே 10, 946[1] முதல் தன் இறப்பு வரை (955) இருந்தவர்.

இவரின் ஆட்சியின் போது, மரோசியாவின் மகனான இரண்டாம் அல்பேரிக் (Alberic II) (932–954) உரோமை நகரை "ஆட்சிப்பேரவை தலைவர் மற்றும் இளவரசர்" என்னும் பட்டத்தில் ஆட்சிசெய்து வந்தான்.

திருத்தந்தை மூன்றாம் செர்ஜியுஸின் ஆட்சிகாலத்திலிருந்து (904–911) திருத்தந்தை பன்னிரண்டாம் யோவானின் (955–964) காலம் வரை (963) நிலவிவந்த விந்த விபச்சார திருப்பீட காலத்தை (Pornocracy) முடிவுக்கு கொணர முயற்சித்தார். இவர் உதவி கோரிய முதலாம் ஓட்டோ (Otto I the Great) மன்னனின் பலம் இரண்டாம் அல்பேரிகின் பலத்தைவிட இவர் காலத்தில் சிறுத்திருந்தது. ஆகவே இவரின் முயற்சிகள் இவரின் இறப்புக்கு பின்னரே பலனளித்தன.

மேற்கோள்கள்[தொகு]

  1.   "Pope Agapetus II". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 

வெளி இணைப்புகள்[தொகு]


கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
இரண்டாம் மரீனுஸ்
திருத்தந்தை
946–955
பின்னர்
பன்னிரண்டாம் யோவான்