நெசவுத் தொழில்நுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நெசவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

நெசவுத் தொழில்நுட்பம் அல்லது நெசவுத் தொழில் இது மக்கள் பயன்படுத்தும் உடுத்தும் உடையான ஆடை, படுக்கை விரிப்பான பாய் கம்பளம் மற்றும் சாக்கு உற்பத்தி செய்வதற்கு உதவும் நுட்பம் ஆகும். ஒவ்வொரு தொழிலும் அதன் மூலப்பொருட்கள் அதிகமாக கிடைக்கும் பகுதிகளில் புகழ்பெற்றிருக்கும். பஞ்சு உற்பத்தி, விசைத்தறி பயன்பாடு, சாயமிடல் போன்ற செயல்பாட்டு நுட்பங்கள் நெசவுத் தொழில்நுட்பத்தில் அடங்கும். இது ஒரு பழந்தமிழர் தொழில்நுட்பம் ஆகும்.

தமிழர்களும் நெசவுக்கலையும்[தொகு]

நெசவுத் தொழில்நுட்பத்தை ஒரு கலையாகவே தமிழர்கள் பாவித்து பின்பற்றி வந்துள்ளனர். பருத்தியிலிருந்து நூல் நூற்றலையும், கைத்தறியையும், தையலையும் பண்டைக்காலம் தொட்டே தமிழர் அறிந்திருந்தனர். தமிழர்கள் இத்துறையில் கொண்ட தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் தமிழர் நெசவுக்கலை குறிக்கின்றது.

மகாவம்சத்தில் நெசவு[தொகு]

இலங்கையின் வரலாற்றின் முற்பட்ட நூலான மகாவம்சத்தின் கூற்றின் படி, இலங்கைக்கு விசயனும் அவனது நண்பர்கள் 700 பேரும் தம்பபண்ணி எனும் இடத்தை வந்தடைந்ததன் பின்னர், விசயனின் நண்பர்கள் அவ்விடத்தில் தோன்றிய ஒரு பெண்ணை (யாக்கினி) பின் தொடர்ந்து ஒவ்வொருவரும் செல்கின்றனர். அங்கே குவேணி அவர்களை பொய்கை ஒன்றில் சிறைவைக்கின்றாள். கடைசியாக அவர்களை தேடி விசயன் செல்லும் போது, ஒரு மரத்தடியில் துறவி வடிவில் குவேணி நூல் நூற்றுக்கொண்டிருக்கின்றாள், எனும் தகவல் விசயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கையில் நெசவு கைத்தொழில் பற்றிய அறிவு இருந்துள்ளதை வெளிப்படுத்துகிறது. [1]

பல்வேறு பிரிவுகள்[தொகு]

நெசவுத்தொழில்நுட்பம் பண்டைய காலந்தொட்டே தமிழர்களின் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. நெசவுத்தொழில்நுட்பத்தை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கலாம்..

1. இயற்கையான பஞ்சுத்துணி நெசவுகள் (காட்டன் / பருத்தி இழை, சணல், மூங்கில் மற்றும் பல)
2. செயற்கை இழை பஞ்சுத்துணி நெசவுகள் (பாலியஸ்டர், விஸ்கோஸ், மற்றும் பல)
3. மிருக உரோம நெசவு (வுல் எனப்படும் ஆட்டிழை மற்றும் பல)

பருத்தி இழை நெசவுத்தொழில்நுட்பம்[தொகு]

பருத்தி இழை நெசவுத்தொழில்நுட்பம் பல படிகளை உள்ளடக்கியது....

1. பஞ்சடித்தல் (ஜின்னிங்)
2. நூல் தயாரிப்பு (ஸ்பின்னிங் )
3. நூலை பதப்படுத்துதல், சாயப்படுத்துதல் மற்றும் நெசவிற்கு தயார்படுத்துதல் (புராஸஸிங்,டையிங் மற்றும் வீவிங் பிரிபரேசன்)

பஞ்சடித்தல் (ஜின்னிங்)[தொகு]

விவசாயிகளிடமிருந்து வாங்கிய பருத்தியை இயந்திரம் மூலம் விதை நீக்கி பஞ்சு தனியே பிரித்தெடுக்கப்பட்டு பொதிகளாக்கப்பட்டு நூற்பாலைகளுக்கு அனுப்பும் முறை.

நூல் தயாரிப்பு (பன்னல் / ஸ்பின்னிங்)[தொகு]

Ring spinning machine in the 1920s.jpg

பன்னல் / ஸ்பின்னிங் எனப்படும் நூற்பு தொழில்நுட்பம் மிக மிக எளிதானது.

முதலில் நூல்களை அதன் இயல்புக்கு தகுந்தவாறு பகுப்பது என்பது மிக முக்கியம். நூல்களை (yarn). பொதுவாக எண்ணிக்கை (count) என்ற காரணியால் பகுப்பார்கள்.

பல்வேறு விதமான துணிகளுக்கு பல்வேறு விதமான நூல்கள் தேவை. நீங்கள் கடையில் சென்று போர்வையும், மேலாடையும் வாங்குகிறீர்கள். இரண்டும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? இல்லையே..பிறகு வேறுபாடு எதில் ? அங்கேதான் இந்த நூலின் எண்ணிக்கை (yarn count) வருகிறது. அந்தந்த நூலின் எடைக்கு (weight) தகுந்தாற்போல் அந்த நூலின் எண்ணிக்கை குறிக்கப்படுகிறது.

நல்ல கனமான நூல் (coarser count) போர்வைக்கும் மெல்லிசான நூல் (finer count ) மேலாடைக்கும் பயன் படுத்தப்படுகிறது!!

நூலின் எண்ணிக்கை[தொகு]

நூல் எண்ணிக்கைகளில் பலவிதங்கள் உண்டு. ஆனாலும் அதிகமாக புழக்கத்தில் உள்ள ஆங்கில எண்ணிக்கை (English count) முறையையே நாம் எடுத்துக்கொள்வோம்.

ஆங்கில எண்ணிக்கை (English count) - Ne

இந்த வகை கவுன்ட் முறையில் பொதுவாக நூலின் நீளம் “யார்ட்” (yard - கஜம்) என்ற அளவையில்தான் ( 1மீட்டர் - 1.09 யார்ட்- கஜம்) அளக்கப்படுகிறது. அதே போல் நூலின் எடை பவுன்ட் (pound) என்னும் அளவையில் தான் குறிப்பிடப்படுகிறது( 1 கிலோ கிராம் = 2.2 பவுன்ட் )

ஆக , ஒரு பவுன்ட் நூலை எடுத்து எடை போட்டு , அதில் எத்துனை 840 யார்ட், நீளமுள்ள நூல்கள் இருக்கிறதோ அதுவே அந்நூலின் கவுன்ட் (எண்ணிக்கை).

இன்னும் விரிவாகச் சொன்னால் 10 என்பது ஒரு நூலின் கவுன்ட் (எண்ணிக்கை) என்றால், அதே நூலை ஒரு பவுன்ட் எடுத்து நீளத்தை அளந்தோமானால் மொத்த நீளம் 8400 யார்ட்ஸ் (yard - கஜம்) என்பதாம்

ஆங்கிலத்தில்[தொகு]

English Count (Ne) = No. of 840 yards in 1 pound of yarn

தறி[தொகு]

கைத்தறி நெசவு[தொகு]

கைத்தறி நெசவு

கைத்தறி நெசவு

விசைத்தறி[தொகு]

விசைத்தறி நெசவு

விசைத்தறி

இவற்றையும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. The Coming of Vijaya| Page 43

வெளி இணைப்புகள்[தொகு]