உள்ளடக்கத்துக்குச் செல்

பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரைப்பாய்
பன்புல்லினால் ஆக்கப்பட்ட கல்யாணப் பாய், இடம்: மட்டக்களப்பு, இலங்கை

பாய் என்பது எளிமையான படுக்கை விரிப்பாகும். மங்கல நிகழ்வுகளில் மதிக்கப்பட்டு, பந்திகளிலும், உறக்கத்திற்கும் உதவுவன ஆகும். பன் பாய்கள் சூழல் நேயமுள்ள நிலவிரிப்புகளாகும்.[1]

வரலாறு[தொகு]

பாய்களின் பயன்பாடு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கலாம் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கற்குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் கோடைக்காலத்தில் ஏற்படும் வெம்மையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இலைதழைகளைப் பரப்பி படுக்கைகளைச் செய்தவர்கள், பின்னாளில் அதில் ஒரு வடிவநேர்த்தியை உருவாக்கிக்கொண்டிருக்கலாம். புற்களால் பின்னி முடைந்து உருவாக்கப்பட்ட பாய்களை மெசபடோமியா பகுதிகளில் கி.மு. 6000 காலகட்டத்தில் உருவாக்கியதன் எச்சமானது தொல்லியலாளர்களால் கண்டறிந்துள்ளனர்.[2]

வகைகள்[தொகு]

  • பனைஓலை பாய்
  • மூங்கில்நார் பாய்
  • நாணல்கோரை பாய்

பயன்பாடு[தொகு]

  • பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.
  • மூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர் மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.
  • நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்.

நாணல்கோரை பாய் தயாரிப்பு[தொகு]

ஆற்றோரம் நாணல் புல் நீண்டு வளரும். அதை அறுத்து சூரிக்கத்தியின் (இருபுறமும் கூரான கத்தி) உதவியால் இரண்டாகக் கீறி பின் கட்டுகளாக கட்டி வெயிலில் உலர வைப்பர். உலர்ந்த அக்கட்டுகளை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து,. அதை மீண்டும் இரண்டாக கீறி வெயிலில் உலர வைப்பர். உலர்ந்த நாணல்கோரையினை மூன்றடி உயரம், நான்கடி உயரம் என்று உயர அளவுப்படி பிரித்து அதில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று தனித்தனியாகச் சாயம் ஏற்றுவர். பக்குவப்படுத்தி அவைகளைப் பனை மற்றும் கற்றாழை நாரால் கோத்து பாயை உருவாக்குவார்கள்.

தேவையான கருவிகள்[தொகு]

பாய் நெசவு செய்ய, முக்காலி மிதிபட்டை, அன்னகுழல், குச்சாலி, இழுத்துக்கட்ட கயிறுகள், சிறிய நீள்வச பலகைகள் தேவை.

மூலப்பொருட்கள்[தொகு]

இயற்கைத் தாவரங்களான நாணல்கோரைப்புல், மற்றும் கற்றாழை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Weavers of dreams". Deccan Herald. 26 October 2014. http://www.deccanherald.com/content/437780/weavers-dreams.html. பார்த்த நாள்: 6 July 2017. 
  2. காட்சன் சாமுவேல் (5 சனவரி 2019). "சுகம் தரும் பனை ஓலைப் பாய்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 5 சனவரி 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்&oldid=3577761" இலிருந்து மீள்விக்கப்பட்டது