உள்ளடக்கத்துக்குச் செல்

சாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாக்கு இதனை கோணி என்றும் கூறுவர். இது விவசாய விளைபொருட்கள், தொழிற்சாலை உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை சேமிக்கவும், சந்தைக்கு கொண்டு செல்லவும் பயன்படும். இதனை சணல் அதிகம் விளையும் பகுதியில் நெசவு செய்து பின் தேவையான அளவுகளில் பைகளாக தையல் செய்வார்கள்.

தற்காலத்தில் பெட்ரோலியப்பொருளில் இருந்து தயாரிக்கப்படும் செயற்கை பாலிஎத்தலின் இழைகளால் தயாரிக்கப்பட்ட துணி வகை உபயோகம் அதிகமானதால் சணல் வகை சாக்குப்பை உபயோகம் குறைந்துள்ளது.

வேர்ச்சொல்

saco என்ற போர்த்துகீசிய சொல்லில் இருந்து வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கு&oldid=2594005" இலிருந்து மீள்விக்கப்பட்டது