1849
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1849 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1849 MDCCCXLIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1880 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2602 |
அர்மீனிய நாட்காட்டி | 1298 ԹՎ ՌՄՂԸ |
சீன நாட்காட்டி | 4545-4546 |
எபிரேய நாட்காட்டி | 5608-5609 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1904-1905 1771-1772 4950-4951 |
இரானிய நாட்காட்டி | 1227-1228 |
இசுலாமிய நாட்காட்டி | 1265 – 1266 |
சப்பானிய நாட்காட்டி | Kaei 2 (嘉永2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2099 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4182 |
1849 (MDCCCXLIX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 1 - பிரான்ஸ் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.
- ஜனவரி 13 - இரண்டாவது ஆங்கிலேய-சீக்கியப் போர்: பிரித்தானியப் படைகள் டூல் போர்க்களத்தில் பின்வாங்கினர்.
- ஜனவரி 23 – எலிசபெத் பிளாக்வெல் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவரானார்.
- பெப்ரவரி 8 – புதிய ரோமக் குடியரசு நிறுவப்பட்டது.
- மார்ச் 3 - மினசோட்டா ஐக்கிய அமெரிக்காவின் ஒரு மாநிலமானது.
- மார்ச் 28 – மடகஸ்காரில் நான்கு கிறித்தவர்கள் உயிருடன் எரிக்கப்படுவதற்கு அந்நாடு அரசி முதலாம் ரனவலோனா உத்தரவிட்டார்.
- மார்ச் 29 – பஞ்சாப் பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
- ஏப்ரல் 2 - செருமனியின் 1848 புரட்சி தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
- ஏப்ரல் 14 – ஹங்கேரி ஆஸ்திரியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- மே 17 - மிசூரியில் செல் லூயிஸ் நகரில் நீராவிப் படகொன்று தீப்பற்றியதில் நகரம் முழுவதும் அழிந்தது.
- ஜூலை 3 – பிரெஞ்சுப் படைகள் ரோம் நகரை முற்றுகையிட்டனர். ரோமக் குடியரசு வீழ்ந்தது.
- ஆகஸ்ட் - இலங்கையின் வடக்கே மாந்தோட்டையில் ஆயர் பெட்டாச்சினிக்கு எதிராக கோவா பாதிரியார் மிகுவேல் பிலிப்பு மஸ்கரானஸ் என்பவர் கிளர்ச்சியில் ஈடுபட்டார். மன்னார் மற்றும் மாந்தோட்டையில் ஸ்கீசிம் (Schism) பரவ ஆரம்பித்தது.
- ஆகஸ்ட் 8 – ஆஸ்திரியா ஹங்கேரியின் எழுச்சியை இரசியப்படைகளின் துணையுடன் அடக்கியது.
- ஆகஸ்ட் 24 – வெனிஸ் ஆஸ்திரியப் படைகளிடம் வீழ்ந்தது.
நாள் அறியப்படாதவை
[தொகு]- சைவசிந்தாந்த மெய்யியல் மூன்று பாகங்கள் யாழ்ப்பாணத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.
பிறப்புக்கள்
[தொகு]இறப்புக்கள்
[தொகு]- ஜனவரி 6 - சண்முகச் சட்டம்பியார், யாழ்ப்பாணத்தின் தமிழறிஞர், தமிழ்ப் பேராசிரியர்
- ஜூன் 15 - ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11 ஆவது குடியரசுத் தலைவர் (பி. 1795)
- அக்டோபர் 17 - பிரடெரிக் சொப்பின், போலந்து இசையமைப்பாளர் (பி. 1810)
- அக்டோபர் 7 - எட்கர் ஆலன் போ (பி. 1809) அமெரிக்க கவிஞர், எழுத்தாளார்.