பிரடெரிக் சொப்பின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Chopin, 1835
சொப்பினின் கையெழுத்து.

பிரடெரிக் சொப்பின் (Frédéric Chopin - 1 மார்ச் 1810[1] – 17 அக்டோபர் 1849) ஒரி போலிய (Polish) இசையமைப்பாளரும், பியானோ இசைக் கலைஞரும் ஆவார். இவர் மிகச் சிறந்த போலிய இசையமைப்பாளராக மதிக்கப்படுகிறார்.

இவர் வார்சோ டியூச்சியில் இருந்த செலாசோவா வோலா என்னும் ஊரில் ஒரு போலியத் தாய்க்கும், போலந்தில் வாழ்ந்த பிரெஞ்சுத் தந்தைக்கும் மகனாகப் பிறந்தார். இவர் சிறு வயதிலேயே பியானோ மேதையாகக் கணிக்கப்பட்டவர். 1830-31ல் நடைபெற்ற போலந்துக் கிளர்ச்சி அடக்கப்பட்ட பின்னர், 1830 நவம்பரில் அவருக்கு 20 வயதாக இருந்தபோது, போலந்தை விட்டு வெளிநாட்டுக்குச் சென்றார்.

பாரிசில் சொப்பின் ஒரு இசையமைப்பாளர் ஆகவும், பியானோ ஆசிரியராகவும், அவ்வப்போது சில நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டும் வசதியாக வாழ்ந்து வந்தார். இவர் போலந்தின் ஒரு நாட்டுப்பற்றாளராக இருந்தும், பிரான்சில் இருந்தபோது தனது பெயரைப் பிரெஞ்சு வழக்கப்படியே பயன்படுத்தி வந்தார். பின்னர் ரஷ்யப் பேரரசின் ஆவணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக பிரெஞ்சுக் குடிமகனானார்.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரடெரிக்_சொப்பின்&oldid=1828292" இருந்து மீள்விக்கப்பட்டது