உள்ளடக்கத்துக்குச் செல்

பார்செலோனா

ஆள்கூறுகள்: 41°23′N 2°11′E / 41.383°N 2.183°E / 41.383; 2.183
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பார்சிலோனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பார்செலோனா
Barcelona (எசுப்பானியம்)
Barcelona (காட்டலான்)
வானத்திலிருந்து பார்செலோனா
வானத்திலிருந்து பார்செலோனா
பார்செலோனா-இன் கொடி
கொடி
பார்செலோனா-இன் சின்னம்
சின்னம்
பார்செலோனா அமைவிடம்
பார்செலோனா அமைவிடம்
பார்செலோனா is located in காத்தலோனியா
பார்செலோனா
பார்செலோனா
பார்செலோனா is located in எசுப்பானியா
பார்செலோனா
பார்செலோனா
பார்செலோனா is located in ஐரோப்பா
பார்செலோனா
பார்செலோனா
ஆள்கூறுகள்: 41°23′N 2°11′E / 41.383°N 2.183°E / 41.383; 2.183
நாடு எசுப்பானியா
தனியாட்சிப் பகுதி காத்தலோனியா
மாகாணம்பார்செலோனா
கொமார்க்காபார்செலோனெஸ்
தோற்றம்கி.மு. 3ம் நூற்றாண்டு
அரசு
 • மாநகரத் தலைவர்அடா கொலாவ் பல்லானோ
பரப்பளவு
 • மாநகரம்101.4 km2 (39.2 sq mi)
ஏற்றம்
12 m (39 ft)
மக்கள்தொகை
 (2018)
 • மாநகரம்16,20,343
 • அடர்த்தி16,000/km2 (41,000/sq mi)
 • நகர்ப்புறம்
48,40,000[2]
 • பெருநகர்
54,74,482[3]
நேர வலயம்ஒசநே+1 (ம.ஐ.நே.)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (ம.ஐ.கோ.நே.)
இடக் குறியீடு+34—93
இணையதளம்www.barcelona.cat இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

பார்செலோனா (அல்லது பார்சிலோனா) (Barcelona; /ˌbɑːrsəˈlnə/; எசுப்பானியம்: [baɾθeˈlona]) எசுப்பானியா நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரம் ஆகும். காட்டலோனியா பகுதியின் தலைநகரம் ஆகும். இந்நகரின் மக்கள் தொகை 2018 கணக்கெடுப்பின் படி 16,20,343 ஆகும்; இது பார்சிலோனா நிர்வாகப் பகுதிக்குள் வாழும் மக்கள்தொகையாகும், அதாவது 101.4 கிமீ² பரப்பில் வாழ்வோரின் மக்கள்தொகை. புறநகர்ப் பகுதியில், இது 803 கிமீ² வரை விரிகிறது, தோராயமாக 4.5லிருந்து 5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பாரீசு, இலண்டன், ரூர், மிலான் ஆகிய நகர்களுக்கடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிக புறநகர் மக்கட்தொகை கொண்ட (ஆறாவது இடத்தில்) நகராகத் திகழ்கிறது. மெடிட்டரேனியன் கடற்கரையில் இருக்கும் பெருநகர்களிலேயே இதுவே மிகப்பெரிய நகரமாகும். இந்நகரம் யோப்ரிகாட் மற்றும் பீசோசு நதிகளின் முகவாய்ப்பகுதிகளின் இடையே அமைந்துள்ளது. இதன் மேற்கு எல்லையாக செல்லா டி கோல்செரோலா மலைமுகடு (512 மீ/1680 அடி) அமைந்துள்ளது.

ரோமானியப் பேரரசின் நகரமாகத் தோற்றுவிக்கப்பட்ட பார்செலோனா, விரைவில் பார்செலோனா மாவட்டத்தின் தலைநகராக மாறியது. அரகான் அரசாட்சியின் ஆளுகைக்குட்பட்ட பின்னர், அரகான் பேரரசின் மிக முக்கியமான நகரமாக பார்செலோனா உருப்பெற்றது. வரலாற்றில் பலமுறை முற்றுகையிடப்பட்டு சிதைக்கப்பட்ட இந்நகரம், தற்போது செழுமையான பாரம்பரிய சின்னமாகத் திகழ்கிறது. இக்காலத்தில், மிக முக்கியமான கலாச்சார நடுவமாகவும் அதிகம் வெளிநாட்டுப் பயணிகள் வருகைதரும் இடமாகவும் இந்நகரம் இருக்கிறது. 1992இல் இந்நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. மேலும் பல முக்கியமான உலகத்தரத்திலான மாநாடுகளும் கலந்தாய்வுகளும், முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

வரலாறு

[தொகு]
  • பார்சிலோனா நகர் குறித்து இரண்டு வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதில் புராண ஹெர்குலிஸ் இதை நிறுவியதாகவும், மற்றொரு கருத்து கிமு 3 ஆவது நூற்றாண்டில் ஹன்னிபாலின் தந்தையான கார்தீஜினியாவின் ஹமில்கார் நிறுவியதாகவும் தெரியவருகிறது.
  • கி.மு 15 ஆம் ஆண்டு ரோமானிய படைப் பிரிவுகள் இந்நகரத்தில் இராணுவ மையத்தை அமைத்தது.
  • 343 ஆம் ஆண்டு பசிலிக்கா டி லா என்ற தேவாலயம் இந்நகரத்தில் நிறுவப்பட்டது.
  • 5 ஆம் நூற்றாண்டில் விசிகோத்களால் கைப்பற்றப்பட்டப் பின் சில ஆண்டுகளுக்கு இது ஹிஸ்பானியாவின் தலைநகராக இருந்தது
  • 8 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் இதை கைப்பற்றினர்.
  • 1137 இல் இரண்டாம் அல்ஃபோன்சா அரியணை ஏறிய பின் இது அரகான் அரசுடன் இணைக்கப்பட்டது.
  • 1401 இல் ஐரோப்பாவின் பழமையான பொது வங்கியான பார்சிலோனா வங்கி நிறுவப்பட்டது.
  • 1469 இல் அமெரிக்காக் குடியேற்றங்கள் தொடங்கிய போது இதன் வர்த்தக முக்கியத்துவம் குறைந்தது
  • 1650-1654 வரையிலான பிளேக் நோய் மூலம் நகரின் மக்கள் தொகை பாதியாக குறைந்தது.
  • 26 ஜனவரி 1939 இல் இந்நகரத்தின் வீழ்ச்சிக்கு பின் இதன் மக்கள் பலர் பிரான்சு நாட்டிற்கு குடி பெயர்ந்தனர்.
  • 1992 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பார்சிலோனா நகரில் நடைபெற்றபின் புத்துயிர் பெற்றது.

பொருளாதாரம்

[தொகு]

பார்சிலோனா உலகின் முன்னணி பொருளாதார ,சுற்றுலா, மற்றும் வர்த்தக நகரமாக திகழ்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் படி ஐரோப்பிய ஒன்றியத்தின் நான்காவது பொருளாதார சக்தியாகவும் உலகில் 35 வது இடத்தயும் வகிக்கின்றது.இதன் மொத்த உற்பத்தி €177 பில்லியன் யூரோ ஆகும். இது வருடத்திற்கு 17% வளர்ச்சிடயுடன் ஐரோப்பாவின் நான்காவது வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது.

போக்குவரத்து

[தொகு]

பார்சிலோனா ஐரோப்பாவின் முக்கிய போக்குவரத்து துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது.இது ஐரோப்பியாவில் 9 ஆவது இடத்தில் உள்ளது.இது 7.86 சதுர கி.மீ பரப்பளவுடன் பழைய,வர்த்தக,இலவச துறைமுகம் ஆகிய 3 பிரிவுகளை கொண்டது.

மேலும் 35 மில்லியன் பயணிகளை கையாளும் சர்வதேச விமான நிலையத்தையும் கொண்டது இது இசுபானியாவின் இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும். ஐரோப்பிய பிரான்ஸ் மற்றும் இசுபானியாவை இணைக்கும் உலகின் இரண்டாவது மிக நீளமான அதிவேக ரயில் பாதையின் முக்கிய மையமாக உள்ளது பொதுமக்களின் போக்குவரத்திற்காக 11 மெட்ரோ பாதைகளையும் கொண்டது. மேலும் பொது மக்கள் சாலைகளையும் கொண்டுள்ளது.

உலகப் பாரம்பரியக் களங்கள்

[தொகு]

ஐநாவின் யுனெஸ்கோ நிறுவனத்தாரால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்கள் (பார்செலோனாவில் இருப்பவை) பின்வருமாறு:[4]

குறியெண் பெயர் வருடம் ஆயத்தொலைகள் படிமம்
320-001 பார்க் க்வெல் 1984 41°24′59.6″N 2°09′07.9″E / 41.416556°N 2.152194°E / 41.416556; 2.152194 (Parque Güell)
320-002 பாலோ க்வெல் 1984 41°22′45″N 2°10′28″E / 41.379183°N 2.174445°E / 41.379183; 2.174445 (Palacio Güell)
320-003 காஸா மில்லா 1984 41°23′51.3″N 2°09′46.9″E / 41.397583°N 2.163028°E / 41.397583; 2.163028 (Casa Milà)
320-004 காஸ விசென்ஸ் 2005 41°22′50.5″N 2°10′30.6″E / 41.380694°N 2.175167°E / 41.380694; 2.175167 (Casa Vicens)
320-005 சாக்ரடா ஃபெமிலியா 2005 41°24′19.8″N 2°10′30.2″E / 41.405500°N 2.175056°E / 41.405500; 2.175056 (Templo Expiatorio de la Sagrada Familia)
320-006 காசா பாட்லோ 2005 41°22′00.3″N 2°09′59.0″E / 41.366750°N 2.166389°E / 41.366750; 2.166389 (Casa Batlló)
804-001 பாலொ டி லா மியூசிகா காடாலானா 1997 41°23′16″N 2°10′30″E / 41.38778°N 2.17500°E / 41.38778; 2.17500
804-002 டி சான்ட் பாவ் மருத்துவமனை 1997 41°24′50″N 2°10′30″E / 41.41389°N 2.17500°E / 41.41389; 2.17500 (Hospital de la Santa Cruz y San Pablo)

உசாத்துணைகள்

[தொகு]
  1. "El municipi en xifres: Barcelona". Statistical Institute of Catalonia. Archived from the original on 24 November 2015. பார்க்கப்பட்ட நாள் 23 November 2015.
  2. Demographia: World Urban Areas பரணிடப்பட்டது 3 மே 2018 at the வந்தவழி இயந்திரம் – Demographia, April 2018
  3. Population on 1 January by broad age group, sex and metropolitan regions பரணிடப்பட்டது 22 ஆகத்து 2016 at the வந்தவழி இயந்திரம்Eurostat, 2017
  4. The seventh element of Place World Heritage "Works of Antoni Gaudí" is the Crypt in Colònia Güell, which is located at Santa Coloma de Cervelló.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்செலோனா&oldid=3621750" இலிருந்து மீள்விக்கப்பட்டது