புனித தோமையார் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புனித தோமையார் மலை
St. Thomas Mount
neighbourhood
புனித தோமையார் மலைSt. Thomas Mount is located in Chennai
புனித தோமையார் மலைSt. Thomas Mount
புனித தோமையார் மலை
St. Thomas Mount
ஆள்கூறுகள்: 12°59′42″N 80°11′58″E / 12.99506°N 80.19955°E / 12.99506; 80.19955ஆள்கூற்று: 12°59′42″N 80°11′58″E / 12.99506°N 80.19955°E / 12.99506; 80.19955
நாடு இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாநகரம் சென்னை
அரசு
 • ஆட்சி செ.பெ.வ.கு
Languages
 • Official Tamil
நேர வலயம் IST (ஒசநே+5:30)
திட்ட நிறுவனம் செ.பெ.வ.கு

புனித தோமையார் மலை (St. Thomas Mount) என்பது பரங்கிமலை என்னும் பெயராலும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு சிறு மலை ஆகும். இம்மலை சென்னை நகரின் கிண்டி பகுதியில், சென்னை விமான நிலையத்திற்கு வெகு அருகில் உள்ளது.

கிறித்தவ சமயத்தை முதன்முதல் இந்தியாவுக்குக் கொணர்ந்தவர் இயேசுவின் சீடரான புனித தோமா என்பதும், அவர் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக இம்மலையில் உயிர்நீத்தார் என்பதும் மரபுவழிச் செய்தி. அதன் அடிப்படையில் இம்மலை புனித தோமையார் மலை என்னும் பெயர் பெற்றது.

போர்த்துகீசியரின் வருகையைத் தொடர்ந்து இம்மலைப் பகுதியில் பல கிறித்தவர்கள் குடியேறினர். 300 அடி உயரத்தில் உள்ள அம்மலைமீது போர்த்துகீசிய மறைப்பணியாளர்கள் 1523ஆம் ஆண்டில் அழகியதொரு கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1986, பெப்ருவரி 5ஆம் நாள் இம்மலைக் கோவிலைச் சந்தித்தார்.

புனித தோமையார் மலையின் அடிவாரத்தில் இந்திய இராணுவத்தின் அலுவலர் பயிற்சி அக்காதெமி (Officer Training Academy [OTA]) அமைந்துள்ளது. அங்கே தொடருந்து நிலையமும் இப்பெயருடன் விளங்குகிறது.

மலையின் அமைவிடம்[தொகு]

புனித தோமையார் மலையில் அமைந்த கோவில்[தொகு]

தோமையார் மலைமீது அமைந்த கோவில் குழந்தைப் பேறு எதிர்பார்க்கும் அன்னை மரியாவுக்கு (Our Lady of Expectation) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புனித தோமா கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்துறந்த இடத்தின்மீது இக்கோவிலைப் போர்த்துகீசியர் கட்டியெழுப்பினர் (ஆண்டு: 1523). கோவிலின் முதன்மைப் பீடத்தின் கீழ் அவ்விடம் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது. 15545 மலையடிவாரத்தின் வடக்குப் பக்கத்தில் உயர்ந்தெழுகின்ற கோபுர வாசல்கள் நான்கு உள்ளன. அவற்றின் அருகே ஒரு பெரிய சிலுவை உள்ளது. அதில் 1547 என்னும் ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளது. மலையின் உச்சியைச் சென்றடைய 160 படிகள் கொண்ட படிக்கட்டு செதுக்கப்பட்டுள்ளது.

மலையில் ஏறிச் செல்லும்போது படிகளின் அருகே நெடுகிலும் இயேசுவின் துன்பங்களையும் சாவையும் சித்தரிக்கின்ற சிலுவைப் பாதை சுரூபங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருப்பயணியர் மேலே ஏறிச் செல்லும்போது சிலுவைப் பாதை வேண்டல் நிகழ்த்துவது வழக்கம்.

புனித தோமையார் மலையிலிருந்து சென்னை நகரத்தின் ஒட்டுமொத்தப் பார்வை

படத் தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_தோமையார்_மலை&oldid=1755587" இருந்து மீள்விக்கப்பட்டது