பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
(தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பரங்கிமலை | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ச. அருண்ராஜ், இ. ஆ. ப |
மக்களவைத் தொகுதி | தென் சென்னை |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | சோழிங்கநல்லூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 2,04,198 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] தாம்பரம் வட்டத்தில் அமைந்த பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பல்லாவரம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், சிட்லப்பாக்கத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 2,04,198 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 31,138 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,939 ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]
- வேங்கைவாசல்
- திருவெஞ்சேரி
- திரிசூலம்
- சித்தாலபாக்கம்
- பொழிச்சலூர் கிராமம்
- பெரும்பாக்கம்
- ஒட்டியம்பாக்கம்
- நன்மங்கலம்
- முடிச்சூர்
- மூவரசம்பட்டு
- மேடவாக்கம்
- மதுரப்பாக்கம்
- கோவிலம்பாக்கம்
- கவுல்பஜார்
- அகரம்தென்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- கிராம ஊராட்சி
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்துராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ KANCHEEPURAM DISTRICT Panchayat Unions (Blocks)
- ↑ 2011 Census of Kancheepuram District
- ↑ St.ThomasMount Block - Panchayat Villages - 15