கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து, மாமல்லபுரம், தமிழ்நாடு, இந்தியா

கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து (Krishna's Butterball) (வான் இறைக் கல் என்றும் அழைக்கப்படுகிறது)[1] கருங்கலால் ஆன பெரிய உருண்டை வடிவத்தில் தோற்றமளிக்கும் இக்கருங்கல் உருண்டை தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை அருகே சிறு குன்றின் மீது கீழே விழும் நிலையில் உள்ளது.[2] [3] [4] இக்கருங்கல் உருண்டை 6 மீட்டர் உயரமும், 5 மீட்டர் அகலமும் 250 டன் எடையும் கொண்டது.[5] கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து, குன்றின் சரிவில் நான்கடி பரப்பளவில் 1,200 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. [1][6]மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இக்கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்தைக் கண்டுச் செல்கின்றனர்.

பெயர்க்காரணம்[தொகு]

இந்து தொன்மவியலின் படி, கிருஷ்ணர் தன் தாய் யசோதையின் பெரும் பாணையிலிருந்த வெண்ணெயை திருடித் தின்ற செயலை நினைவு கூறும் வகையில் இக்கல் உருண்டைக்கு கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து என அழைக்கப்படுகிறது.[1]

கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து பக்கவாட்டுக் காட்சி, மாமல்லபுரம், தமிழ்நாடு, இந்தியா

வரலாறு[தொகு]

பல்லவ மன்னர் முதலாம் நரசிம்ம பல்லவன் கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து என அழைக்கப்படும், இந்த கருங்கல் உருண்டையை குன்றிலிருந்து கீழே இறக்க செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1908-இல் சென்னை மாகாணத்தின் ஆளுநாராக இருந்த ஆர்தர் ஹேவ்லாக், எந்நேரத்தில் கீழே விழும் நிலையில் இருக்கும் இப்பெரிய உருண்டையான கல்லை, பாதுகாப்பு காரணம் கருதி ஏழு யாணைகளின் உதவியால் குன்றுலிருந்து கீழே இறக்க முயற்சி எடுத்தார். ஆனால் இவரது முயற்சி வெற்றி பெற வில்லை.

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூற்று: 12°37′09″N 80°11′32″E / 12.6191°N 80.1923°E / 12.6191; 80.1923