சேரமான் பரம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேரர் மரபின் நினைவுத் தூண்

சேரமான் பரம்பு (Cheraman Parambu) என்பது சேர மரபு மன்னர்களான சேரமான் பெருமாள்களின் அரச இருக்கையாகக் கருதப்படுகிறது. இந்த அரண்மனை கேரளத்தின் கொடுங்ஙல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் மெத்தலாவில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது . 1936 ஆம் ஆண்டில், இந்த இடம் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1944 மற்றும் 1945 க்கு இடையில் இந்த இடத்தில் அகழாய்வு செய்யபட்டது. அப்போது இங்கு பானை, செம்பு, இரும்பு கருவிகள், வளையல்கள், மணிகள் போன்ற ஆபரணப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. [1] [2] அகழ்வாய்வு செய்யப்பட்டபோது செலாடன் என்ற ஒரு வகையான பாண்டம் கிடைத்ததது. இது கி.பி 10 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான சொங் அரசமரபு காலத்திய சீனத்தில் தயாரிக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரமான்_பரம்பு&oldid=3036180" இருந்து மீள்விக்கப்பட்டது