உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்கம் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலக்கம் அருவி, மூனார், கேரளா. சூன் 2008

இலக்கம் அருவி (Lakkom Falls) இந்தியாவின் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூர் அருகே அமைந்துள்ள ஒரு சுற்றுலாத்தலமாகும்.[1] இரவிகுளம் தேசியப் பூங்காவின் ஒரு பகுதியாகவும், பாம்பார் ஆற்றின் முக்கிய கிளை நதிகளில் ஒன்றாகவும் இருக்கும் இரவிகுளம் ஓடையின் ஒரு பகுதியாக இந்த அருவிகள் உள்ளன.

இருப்பிடம்[தொகு]

மூணாறில் இருந்து 30-35 தொலைவில் அமைந்துள்ள இலக்கம் அருவி, மூணாறில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் உள்ளது.[2] உடுமலைப்பேட்டைக்கு ஒரு பேருந்தில் செல்லலாம் அல்லது மூணாரிலிருந்து உள்ளூர் வாடகை வாகனம் எடுத்தும் இங்கு செல்லலாம். மாநில நெடுஞ்சாலை எண் 17 இல் அருவி உள்ளது.

பிற தகவல்கள்[தொகு]

இலக்கம் அருவியை காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பார்வையிடலாம். பார்வையாளர்கள் நுழைவுக் கட்டணமாக ₹20 செலுத்த வேண்டும். புகைப்படக் கருவிகளுக்கு தனிக் கட்டணம் இல்லை. 100 ரூபாய் கட்டணத்தில் இலக்கம் அருவியில் வழிகாட்டப்படும் மலையேற்றத் திட்டம் ஒன்றும் உள்ளது. இதன் மூலம் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் மலையேற்றம் செய்யலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. தென்றல், தமிழ்த். "கோவை to லக்கம் அருவி - இது மறையூர் ஸ்பெஷல் - அடிக்கு ஓர் அருவி!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-04-29. {{cite web}}: External link in |website= (help)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கம்_அருவி&oldid=3845568" இலிருந்து மீள்விக்கப்பட்டது