அதநாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
அதநாடு (Aathanad) என்பது கேரளத்தின், பாலக்காடு மாவட்டம், நெம்மாரவின் வல்லாங்கியில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். இந்த மலை உச்சியில் உள்ள ஐயப்பன் கோயில் பிரபலமான ஒரு கோயிலாகும். இந்தக் கோயிலின் ஆண்டுத் திருவிழா மலையாள மாதமான தணு 9 (டிசம்பர் 24) அன்று நடைபெறுகிறது. இந்த மலையில் வழிபாடு நடத்த பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் இங்கு வருவகின்றனர். ஆண்டுதோறும் கொண்டாடப்படும் புகழ்பெற்ற நென்மாரா வல்லங்கி வேலா விழா நடக்கும் நெல்லிகுளங்கர கோயில் அகநாட்டு பள்ளதாக்கில் அமைந்துள்ளது. அகநாட்டு மலை உச்சியிலிருந்து காணும்போது வல்லாங்கி, நெம்மர ஊர்கள், போத்துண்டி அணை, நெல்லியம்பதி மலைகள், நெல் வயல்களால் பச்சை கம்பளம் போர்த்தியது போன்று பாலக்காட்டை சூழ்ந்துள்ள காட்சிகள் போன்றவை இங்கு நல்ல ஒரு அனுபவத்தை அளிக்கிறன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதநாடு&oldid=3041879" இருந்து மீள்விக்கப்பட்டது