சிம்மோனி காட்டுயிர் உய்விடம்

ஆள்கூறுகள்: 10°26′20″N 76°27′48″E / 10.438816°N 76.463417°E / 10.438816; 76.463417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்மோனி காட்டுயிர் உய்விடம்
ചിമ്മിനി വന്യജീവി സങ്കേതം
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of சிம்மோனி காட்டுயிர் உய்விடம்
Map showing the location of சிம்மோனி காட்டுயிர் உய்விடம்
அமைவிடம்இந்தியா, கேரளம், திருச்சூர் மாவட்டம்
அருகாமை நகரம்திருச்சூர்
ஆள்கூறுகள்10°26′20″N 76°27′48″E / 10.438816°N 76.463417°E / 10.438816; 76.463417
பரப்பளவு85.067 சதுர கிலோமீட்டர்கள் (32.845 sq mi)
நிறுவப்பட்டது1984 Chimmini dam Facebook Page

சிம்மோனி காட்டுயிர் உய்விடம் (Chimmini Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின், திருச்சூர் மாவட்டத்தின், சாலகுடி வட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி ஆகும்.

புவியியலும், வரலாறும்[தொகு]

1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த சரணாலயம் சுமார் 85.067 கி.மீ 2 பரப்பளவு கொண்டது. இது நெல்லியம்பதி மலைகளின் மேற்கு சரிவுகளில் உள்ளது. சரணாலயத்தின் மிக உயர்ந்த இடம் பூண்டா சிகரம் (1116 மீ) ஆகும். அண்டை பகுதியான பீச்சி-வஹானி வனவிலங்கு சரணாலயத்துடன் சேர்ந்து இது 210 கிமீ 2 பரப்பளவிலான தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியைக் கொண்டதாக உருவாக்கியுள்ளதுகிறது. இது பரம்பிகுளம் வனவிலங்கு சரணாலயத்திற்கு மேற்கே அமைந்துள்ளது. இந்த சரணாலயம் குருமாலி ஆறு மற்றும் முப்லியம் ஆறு போன்ற நீர்நிலை பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த சரணாலயத்தில் அமைந்திருக்கும் சிம்மோனி அணை சிம்மோனி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.[1] [2]

விலங்குகள்[தொகு]

இந்த சரணாலயத்தில் 192 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்ட ஒரு முக்கியமான பறவைகள் வாழும் பகுதியாகும். இப்பகுதியானது சாம்பல் தலை கொண்டைக்குருவி, உளறுவாய் குருவி, வெள்ளை-வயிற்று நீல-ஃப்ளைகாட்சர் உள்ளிட்ட ஐந்து மேற்குத் தொடர்ச்சி மலைகள் அகணிய பறவைகள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் பிற சுவாரஸ்யமான இனங்கள்: இலங்கை தவளைவாயன், இந்திய உழவாரன், தீக்காக்கை, சீகார்ப் பூங்குருவி, லோட்டனின் தேன்சிட்டு போன்றவை ஆகும். அண்மைய ஆய்வில் இங்கு சிறிய மீன் கழுகு இருப்பது பதிவு செய்யப்பட்டது, இது அண்மைக்காலம் வரை இமயமலையின் அடிவாரத்தில் இருப்பதாக மட்டுமே அறியப்பட்டது.

கணக்கெடுப்பின் போது இங்கு காணப்பட்ட மற்ற குறிப்பிடத்தக்க பறவைகளில் பெரிய பருந்து குயில் ( கக்குலஸ் ஸ்பார்வெராய்டுகள் ), கறுவாக் காடை மற்றும் ஆஷி மினிவெட் ( பெரிக்ரோகோட்டஸ் டிவாரிகேட்டஸ் ) ஆகியவை அடங்கும். கேரளத்தில் காணப்படும் பெரிய பாலூட்டிகளில் பாதி சிம்மேனி வனவிலங்கு சரணாலயத்திலிருப்பதாக பதிவாகியுள்ளன, குறிப்பாக உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள புலி, ஆசிய யானை, செந்நாய் போன்றவை இங்குஉளன. மேலும் செம்பட்டியலில் இடம்பெற்ற இனமான இந்திய மலை அணில் மற்றும் அகணிய உயிரியான சோலைமந்தி, நீலகிரி மந்தி, தேவாங்கு போன்றவையும் காணப்படுகின்றன. சரணாலயத்தில் 39 வகையான பாலூட்டிகள், 160 வகையான பறவைகள், 25 வகையான ஊர்வன, 14 வகையான நீர்நில வாழ்வன மற்றும் 31 வகையான மீன்கள் உள்ளன.

பழங்குடி சமூகம்[தொகு]

சரணாலயத்தின் எல்லைக்குள் உள்ள ஒரே பழங்குடி சமூக மக்கள் " மலாயா " பழங்குடியின மக்களாவர். சரணாலயத்தை ஒட்டியுள்ள இரண்டு குடியிருப்புகளில் வசிக்கும் 52 குடும்பங்களைச் சேர்ந்த 210 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சமூகத்தின் வளர்ச்சிக்காக 2002 அக்டோபரில் ஒரு சூழலியல் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவால் தொடங்கப்பட்ட பழங்குடியினர் சார்ந்த சூழலியல் சுற்றுலா திட்டங்கள் சிறப்பாக வளர்ந்து வருகின்றன.

வருகை[தொகு]

இந்த சரணாலயத்தின் தலைமையகம் திருச்சூர் நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள எச்சிப்பாறையில் உள்ளது, இந்த சரணாலயம் சாகச பயணிகளுக்கான மலையேற்ற பாதைகளையும் கொண்டுள்ளது. சிம்மோனி அணைக்கு அருகிலுள்ள ஆய்வு பங்களாவில் தங்குமிடம் ஏற்பாடு செய்துகொள்ளளாம்.

வருகைக்கான அனுமதிகளை கீழ்கண்ட இடத்தில் பெறலாம்: வனவிலங்கு வார்டன், பீச்சி வனவிலங்கு கோட்டம், பீச்சி 680653. இது பீச்சி வனவிலங்கு கோட்டத்தின் கீழ் வருகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "Chimmini Wildlife Sanctuary". The Hindu. Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2012-06-27.
  2. "Chimmini Wildlife Sanctuary". About Chimmini. பார்க்கப்பட்ட நாள் 2012-06-27.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

சிம்மினி அணை பேஸ்புக் பக்கம்

https://youtu.be/TJ6MEgvT7oY