உள்ளடக்கத்துக்குச் செல்

நீலகிரி மந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலகிரி மந்தி
Nilgiri langur[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
செர்கோபித்திசிடே
பேரினம்:
டிராகிபித்திகசு
இனக்கூட்டம்:
டிராகிபித்திகசு வெட்டுலசு
இனம்:
டி. ஜானி
இருசொற் பெயரீடு
டிராகிபித்திகசு ஜானி
(பிசர், 1829)
நீலகிரி மந்தி பரம்பல்

நீலகிரி மந்தி (Nilgiri langur) என்பது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் உள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் குரங்கு இனம் ஆகும். இவை கர்நாடகத்தின் குடகு, தமிழ்நாட்டு பழனி மலைகள், கேரலத்தின் ஏலக்காய் மலை ஆகிய மலைகளில் வாழுகின்றன. இதன் உடல் பளபளபளப்பான கருமையாகவும், மஞ்சளும் பழுப்பும் கலந்த தலையும் கொண்டவை. இதன் அளவு சாதாரணக் குரங்கின் அளவே இருக்கும். நீண்டவால் கொண்டவை. இக்குரங்குகள் ஒன்பது அல்லது பத்து உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமாக வாழும்.[2] இதன் முதன்மை உணவு பழங்கள், இலைகள், தண்டுகள் ஆகும். சிலசமயம் விளைநிலங்களை வேட்டையாடும். இவற்றின் எண்ணிக்கை, மென்மயிர் அடர்ந்த தோலுக்காகவும்,"பாலுணர்வைத் தூண்டும் மருந்து" என்ற நம்பிக்கையாலும் வேட்டையாடப்படுவதால் குறைவடைந்ததன் பொருட்டு இது அழியவாய்ப்புள்ள இனம் என வகைபடுத்தப்பட்டுள்ளது.

வகைப்பாட்டியல்

[தொகு]

நீலகிரி மந்தியின் உயிரியல் வகைப்பாடு சர்ச்சைக்குரியது. பாரம்பரியமாக இது டிராக்கிபிதேகஸ் பேரினத்தினுள் வைக்கப்பட்டுள்ளது. இது மண்டையோட்டு உருவவியல் மற்றும் பிறந்த குழந்தையின் நிறம் போன்ற உருவ ஒற்றுமைகள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது. டி. என். ஏ. மற்றும் பிற சான்றுகள், நீலகிரி மந்தி மற்றும் ஊதா முக மந்தி ஆகியவை சாம்பல் நிற மந்தியுடன் மிகவும் நெருக்கமாக இனத் தொடர்புடையவை. இதனால் செம்னோபிதேகசு இனத்திற்குள் இவை மீண்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[3][4][5][6][7][8]

விளக்கம்

[தொகு]

தலையும் உடலும் சேர்ந்த நீளமானது முதிர்வடைந்த ஆண்களில் 78 முதல் 80 செ. மீ. வரையும், பெண்களில் 58- முதல் 60 செ. மீ. நீளமுடையது. வாலானது முறையே 68.5 மற்றும் 96.5 செ.மீ. நீளமுடையது. ஆண்களின் எடை 9.1 முதல் 14.8 கிலோ வரையும் பெண் எடையானது 10.9 முதல் 12 கிலோ வரையுள்ளது.[9] கர்ப்ப காலம் துல்லியமாக அறியப்படாத போதிலும், அனுமன் மந்திக்கு ஒத்ததாக அதாவது 200 நாட்கள் எனக் கருதப்படுகிறது.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. p. 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help); Check date values in: |date= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. 2.0 2.1 "Trachypithecus johnii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  3. Wilson, Don E.; Mittermeier, Russell A.; Rylands, Anthony B. (2012). "Introduction". Handbook of the Mammals of the World, Volume 3: Primates (1st ed.). Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8496553897. Archived from the original on 2018-08-31. பார்க்கப்பட்ட நாள் 2018-08-30.
  4. Osterholz, Martin; Walter, Lutz; Roos, Christian (2008). "Phylogenetic position of the langur genera Semnopithecus and Trachypithecus among Asian colobines, and genus affiliations of their species groups". BMC Evolutionary Biology 8 (58): 58. doi:10.1186/1471-2148-8-58. பப்மெட்:18298809. 
  5. Brandon–Jones, D. (2004). "Asian Primate Classification". International Journal of Primatology 25 (1): 97–164. doi:10.1023/B:IJOP.0000014647.18720.32. 
  6. Xiao Ping Wang (27 April 2012). "Phylogenetic Relationships among the Colobine Monkeys Revisited: New Insights from Analyses of Complete mt Genomes and 44 Nuclear Non-Coding Markers". PLOS ONE 7 (4): e36274. doi:10.1371/journal.pone.0036274. பப்மெட்:22558416. Bibcode: 2012PLoSO...736274W. 
  7. "Semnopithecus johnii". ITIS Report. ITIS. பார்க்கப்பட்ட நாள் 18 January 2020.
  8. Karanth, K. Praveen (2008). "Molecular phylogeny and biogeography of langurs and leaf monkeys of South Asia (Primates: Colobinae)". Molecular Phylogenetics and Evolution 46 (2): 683–694. doi:10.1016/j.ympev.2007.11.026. பப்மெட்:18191589. http://wgbis.ces.iisc.ernet.in/biodiversity/pubs/ces_pubs/pubs_2008/theme1_08.pdf. பார்த்த நாள்: 2018-08-30. 
  9. 9.0 9.1 Malviya, M.; Srivastav, A.; Nigam, P.; Tyagi, P. C. (2011). "Indian National Studbook of Nilgiri Langur (Trachypithecus johnii)" (PDF). Wildlife Institute of India, Dehradun and Central Zoo Authority, New Delhi.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகிரி_மந்தி&oldid=3774806" இலிருந்து மீள்விக்கப்பட்டது