ஏலக்காய் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏலக்காய் மலை
ஏலக்காய் செடிகள்
உயர்ந்த இடம்
உயரம்2,637 m (8,652 அடி)
ஆள்கூறு9°52′N 77°09′E / 9.867°N 77.150°E / 9.867; 77.150
புவியியல்
அமைவிடம்கேரளம் தமிழ் நாடு
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை
நிலவியல்
பாறையின் வயதுCenozoic, 100 to 80 mya
மலையின் வகைFaultArchaean continental collision
ஏறுதல்
எளிய அணுகு வழிSH 19, SH 33 (Satellite view)

ஏலக்காய் மலை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் தென் மேற்கு பகுதியிலும் கேரளத்தின்தென் கிழக்கு பகுதியிலும் உள்ளது. இம்மலைப்பகுதியில் ஏலக்காய் அதிகம் பயிராவதால் இதற்கு ஏலக்காய் மலை என பெயர் ஏற்பட்டது. ஏலக்காய் தவிர காப்பி மற்றும் மிளகும் இங்கு பயிராகின்றன. ஏலக்காய் மலையின் நடுப்பகுதி அமைந்துள்ள ஆள்கூறு 9'52"N 77'09"E ஆகும். ஆழமான பள்ளத்தாக்குகள் உடைய மலைப்பகுதிகளை கொண்ட இதன் பரப்பு 2,800 சதுர கிமீ ஆகும். மேற்கு நோக்கி பாயும் பெரியாறு, பம்பை ஆறு ஆகியவை இம்மலைப்பகுதி வழியாக பாய்கின்றன. இடுக்கி அணை, முல்லைப் பெரியாறு அணை ஆகியவை இம்மலைத்தொகுதியில் உள்ளன. இதன் வடமேற்கில் ஆனை மலையும் வடகிழக்கில் பழனி மலையும், தென் பகுதியில் அகத்திய மலையும் உள்ளன.[1][2][3]

குளிர் காலத்தில் இம் மலைப்பகுதியின் வெப்பநிலை சராசரியாக 15° செல்சியசும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் 31° செல்சியசும் இருக்கும். ஆண்டு சராசரி மழைப்பொழிவு பெரியாறு உள்ள பகுதிகளில் 2,000 - 3,000 மிமீ இது குறைந்து 1500 மிமீ ஆக திருவில்லிப்புத்தூர் வனவிலங்கு காப்பகத்தின் கிழக்கு பகுதியில் பெய்கிறது. இதன் மேற்கு பகுதி மூன்றில் இரண்டு பங்கு மழையளவை தென்மேற்கு பருவக்காற்றின் மூலம் பெறுகிறது. இவை வடகிழக்குப் பருவக்காற்றின் மூலமும் சிறிதளவு மழைப்பொழிவை பெறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Singh, A.P.; Kumar, Niraj; Singh, B. (2006), "Nature of the crust along Kuppam–Palani geotransect (South India) from Gravity studies: Implications for Precambrian continental collision and delamination", Gondwana Research, 10 (1–2): 41–47, Bibcode:2006GondR..10...41S, doi:10.1016/j.gr.2005.11.013
  2. UNESCO, [1]. Retrieved 20 April 2007.
  3. Frommers Travel Guide (2007) Introduction to Cardamom Hills, Wiley Publishing, Inc. retrieved 9 April 2007 பரணிடப்பட்டது 2017-07-29 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏலக்காய்_மலை&oldid=3889547" இலிருந்து மீள்விக்கப்பட்டது