பெரியாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெரியாறு
பெரியார் நதி இருப்பிட வரைபடம்
பெரியார் நதி இருப்பிட வரைபடம்
மூலம் மேற்குத் தொடர்ச்சி மலையின் சிவகிரி மலைகள்
வாய் அரபிக்கடல்
நீரேந்துப் பகுதி நாடுகள் இந்தியா
நீளம் 244 கி.மீ
தொடக்க உயரம் 1830 மீ
வெளியேற்றம் m³/s
நீரேந்துப் பகுதி 5398 கி.மீ² (கேரளத்தில் 5284 கி.மீ²)


பெரியாறு கேரள மாநிலத்தின் மிகவும் நீளமான ஆறு. இதன் நீளம் 244 கி.மீ உள்ளது. இது தமிழகத்திலுள்ள சிவகிரி மலையின் சுந்தரமலை பகுதியில் உற்பத்தியாகிறது [1][2]. இது வற்றாத ஆறாக இருப்பதால் கேரளத்தின் உயிர்நாடி எனவும் அழைக்கப்படுகிறது. இது கேரளத்தின் பெரிய நகரங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. இடுக்கி அணை இவ்வாற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு மின்வசதி வழங்குகிறது. இதன் மொத்த நீர்பிடிப்பு பகுதி 5398 சதுர கிமீ ஆகும் இதில் கேரளாவில் 5284 சதுர கிமீ பகுதியும் தமிழகத்தில் 114 சதுர கிமீ பகுதியும் உள்ளது. முல்லைப்பெரியாறு அணையும் இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.irenees.net/fr/fiches/analyse/fiche-analyse-633.html
  2. http://www.indiawaterportal.org/sites/indiawaterportal.org/files/Joseph%20M.L.pdf

இதனையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியாறு&oldid=2541391" இருந்து மீள்விக்கப்பட்டது