மணிமாலா ஆறு

மணிமாலா ஆறு கேரள மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்று. இது இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேட்டை அடுத்த தட்டமலையில் உற்பத்தியாகிறது. இங்கிருந்து கோட்டயம், பந்தனம் திட்டை மாவட்டங்களில் ஓடி இறுதியில் ஆலப்புழா மாவட்டத்தின் திருவல்லாவில் பம்பை ஆற்றில் கலக்கிறது. இவ்வாற்றின் நீளம் 91.73 கி.மீ.[1] முண்டக்கயம், எருமேலி, மணிமல, மல்லப்பள்ளி, சம்பக்குளம் ஆகிய ஊர்கள் இவ்வாற்றங்கரையில் அமைந்துள்ளன.