காப்பாடு
| காப்பாடு (കാപ്പാട്) Kappakadavu | |||||
| — கிராமம் — | |||||
| ஆள்கூறு | 11°23′6″N 75°43′3″E / 11.38500°N 75.71750°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | கேரளா | ||||
| மாவட்டம் | கோழிக்கோடு | ||||
| வட்டம் | கோயிலாண்டி | ||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||
| முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||

“வாஸ்கோ ட காமா கப்பாடில் தரையிறங்கினார்] என்ற தவறான கருத்தை யாரும் அகற்ற முயற்சிக்கவில்லை. அரசாங்கம் கப்பாடு கடற்கரையில் ஒரு நினைவுக் கல்லை நிறுவியுள்ளது. உண்மையில் வாஸ்கோ ட காமா [கோழிக்கோடு] மாவட்டத்தில் உள்ள பந்தலாயினியில் (கொயிலாண்டி) தரையிறங்கினார். ஏனெனில் அங்கு ஒரு துறைமுகம் இருந்தது. கோழிக்கோட்டில் இப்போதும் துறைமுகம் இல்லை.”[3]
எம். ஜி. எஸ். நாராயணன்
காப்பாடு (Kappad - மலையாளம்: കാപ്പാട്) இந்தியாவின், கேரள மாநிலத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர கிராமம். இங்கு 2007 இல் ரூபாய் 1.5-கோடியில் கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் கொடிவேரி பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
இந்தக் கிராமம் வரலாற்று சிறப்பு மிக்கது. மாபெரும் மாலுமியான வாஸ்கோ ட காமா மூன்று பெரிய கப்பல்களில், 170 மாலுமிகளோடு, கி.பி. 1498 ஆம் ஆண்டு மே 27 அன்று முதல்முதலாக இந்தியத் துணைக்கண்டக் கரையில் கால்பதித்த இடம் இதுவாகும். இதற்கான நினைவுச் சின்னம் இங்கே பாதுகாக்கபட்டுவருகிறது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை உள்ளதுபோல் கப்பாடு பகுதியிலும் ஒரு பாறை கடலிது துருத்திக்கொண்டு உள்ளது. இந்தக் கிராமம் கோழிக்கோட்டிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது.
நீலக்கொடி கடற்கரை
[தொகு]இக்கடற்கரை பன்னாட்டு சுற்றுசூழல் அறக்கட்டளையிடமிருந்து நீலக்கொடி கடற்கரை எனும் விருது பெற்றுள்ளது.[4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ "Vasco da Gama never landed at Kappad: MGS" (in en-IN). The Hindu. 5 February 2017. https://www.thehindu.com/news/cities/kozhikode/Vasco-da-Gama-never-landed-at-Kappad-MGS/article17198107.ece.
- ↑ India’s 12 Blue Flag beaches