உள்ளடக்கத்துக்குச் செல்

கல்லடா படகுப் போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லடா ஜலோத்சவம்
കല്ലട ജലോത്സവം
தோற்றம்1969
மண்டலம்கொல்லம், கிழக்கு கல்லடா மன்ரோ துருத்து இந்தியா
அணிகளின் எண்ணிக்கை12
தற்போதைய வாகையாளர்கரிச்சல் சுண்டன் [1]

கல்லடா ஜலோத்சவம் (കല്ലട ജലോത്സവം) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தில், ஓணம் (28 ஆம் ஓணம்) விழாவுகுப் பிறகு 28 நாட்களில் மன்ரோ துருத்துவில் கல்லடையாற்றில் நடைபெறும் ஒரு வள்ளங்களி (படகுப் போட்டி ) ஆகும். கல்லடை ஆற்றின் நேரான பகுதியில் (நெட்டையம்) படகுப் போட்டி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் போது பல்வேறு துறைகளில் பிரபலமான சாதனையாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

படகுப் பந்தயத்தை மன்ரோ தீவில் இருந்து வசதியாகக் காணலாம். கேரளத்தின் சுற்றுலா வரைபடத்தில் மன்ரோ தீவு ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கொல்லம் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழு மன்ரோ தீவில் நடத்தும் நாட்டுப் படகு கண்காட்சியானது நாட்டில் மிகச் சிறந்ததாகும். மன்ரோ தீவை கொல்லம் தொடருந்து நிலையத்திலிருந்து சாலை வழியாக (28   கி.மீ). அடையலாம்   குந்தராவிலிருந்து 12 கி.மீ தொலைவிலும், கருணகபள்ளியில் இருந்து வடக்கே 24 கி.மீ. தொலைவிலும்,   திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக 71 கி.மீ தூரத்தில் கொல்லம் உள்ளது.

போட்டிகளுக்கு முன்னதாக வண்ணமயமான படகோட்டம் மற்றும் போட்டியில் கலந்துகொள்ளும் படகுகளின் வெகுஜன ஊர்வலம் ஆகியவை நடக்கும்.

நிகழ்வு பற்றி

[தொகு]

படகுப் போட்டி என்பது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வாகும், இது ஓணத்துக்கு (28 ஆம் ஓணம்) 28 நாட்களுக்குப் பிறகு நடக்கிறது.

படகுகள்

[தொகு]

போட்டியில் ஐந்து இருட்டுக்குத்தி அ தகுதி கொண்ட படகுகள் மற்றும் வெப் ஆப் படகுகள் உட்பட 12 பாம்புப் படகுகள் கலந்துகொள்கின்றன.

கோப்பைகள் மற்றும் பரிசுத் தொகை

[தொகு]

வென்றவர்கள், கல்லாடா சுழல் கோப்பையும் 100,000 50,000, 25000, 15,000 ஆகியவை முதல் நான்கு இடங்களில் வருபவர்களுக்கும், மேலும் 50,000 பரிசானது ஒவ்வொரு அணிக்கும் ஊக்கப் பரிசாக வழங்கப்படும்.

வெற்றியாளர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றியாளர்கள் சங்கம்
2007 கரிச்சல் சுண்டன் இயேசு படகு கிளப்
2008 கரிச்சல் சுண்டன் இயேசு படகு கிளப்
2009 பயிப்பாட் சுண்டன் கண்ணெட்டி சங்கம் படகு கிளப்
2010 கரிச்சல் சுண்டன் இயேசு படகு கிளப்
2011 ஸ்ரீ கணேஷ் சுண்டன் செயின்ட் பிரான்சிஸ் படகு கிளப்
2012 ஸ்ரீ கணேஷ் சுண்டன் செயின்ட் பிரான்சிஸ் படகு கிளப்
2013 ஸ்ரீ கணேஷ் சுண்டன் செயின்ட் பிரான்சிஸ் படகு கிளப்
2014 ஸ்ரீ கணேஷ் சுண்டன் செயின்ட் பிரான்சிஸ் படகு கிளப்
2015 மகாதேவிகாட் கட்டில் தேக்கதில் சுண்டன் செயின்ட் பிரான்சிஸ் படகு கிளப்
2016 அயபரம்ப் பாண்டி யுபிசி கைனகாரி
2017 செயின்ட் பியஸ் 10 வது மான்காம்ப் வெனாட் போட் கிளப், கல்லாடா (எஸ்.எஃப்.பி.சி)
2018 நடத்தப்படவில்லை
2019 நதுபகம் பல்லதுருதி படகு கிளப் (பிபிசி)

கேரளத்தின் பிற புகழ்பெற்ற படகு பந்தயங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Archive News". The Hindu. Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லடா_படகுப்_போட்டி&oldid=3548304" இலிருந்து மீள்விக்கப்பட்டது