நெய்யாறு அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெய்யாறு அணை
Neyyar Dam Full View.jpg
Neyyar Dam
அமைவிடம்இந்தியா, கேரளம்
புவியியல் ஆள்கூற்று8°32′5″N 77°8′45″E / 8.53472°N 77.14583°E / 8.53472; 77.14583ஆள்கூறுகள்: 8°32′5″N 77°8′45″E / 8.53472°N 77.14583°E / 8.53472; 77.14583
திறந்தது1958
இயக்குனர்(கள்)கேரள அரசு
அணையும் வழிகாலும்
வகைநில ஈர்ப்பு
உயரம்56 m (184 ft)
நீளம்294 m (965 ft)
கொள் அளவு105,000 m3 (3,708,040 cu ft)
வழிகால் அளவு809 m3/s (28,570 cu ft/s)
நீர்த்தேக்கம்
மொத்தம் capacity1,060,000,000 m3 (859,356 acre⋅ft)
Active capacity1,010,000,000 m3 (818,820 acre⋅ft)
மேற்பரப்பு area91 km2 (35 sq mi)

நெய்யாறு அணை (Neyyar Dam) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்தில், நெய்யற்றின் குறுக்கே கட்டபட்ட ஒரு அணையாகும், இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில்  திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [1] 1958 இல் நிறுவப்பட்ட இந்த அணையானது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது.

வடிவமைப்பு[தொகு]

நெய்யாறு அணையானது 56 மீ (184 அடி) உயரமும் 295 மீ (968 அடி) நீளமும் கொண்ட ஒரு கட்டுமான நில ஈர்ப்பு வகை அணை ஆகும். இந்த அமைப்பின் கன அளவு 105,000 m3 (3,708,040 cu ft) ஆகும். அணையில் 106,200,000 m3 (86,098 acre⋅ft) அளவில் நீர்த்தேங்கு பகுதியைக் கொண்டுள்ளது. ஆனால் நடைமுறையில் 101,000,000 m3 (81,882 acre⋅ft) நீர் தேக்கப்படுகிறது. நீர்த்தேக்கத்தின் பரப்பளவு 91 km2 (35 sq mi) மற்றும் அணையின் வௌளக்காலில் 809.40 m3/s (28,584 cu ft/s) அதிகபட்ச அளவில் நீரை வெளியேற்றலாம். [2]

வனவிலங்குகள்[தொகு]

Panorama of neyyar reservoir.
Panorama of Neyyar river

நெய்யாறு அணையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டெருது, தேன் கரடி, நீலகிரி வரையாடு, காட்டுப்பூனை நீலகிரி லங்கூர், யானைகள், கடமான் ஆகிய வன விலங்குகள் உள்ளன.[சான்று தேவை]

[ மேற்கோள் தேவை ]

படகு சவாரி

சுற்றுலாப் பயணிகள் அணையைச் சுற்றியுள்ள காடுகளைக் காண விசைப் படகு வசதி உள்ளது. [1]

ஈர்க்கும் அம்சங்கள்[தொகு]

போக்குவரத்து[தொகு]

அருகிலுள்ள வானூர்தி நிலையம் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் (38) கி.மீ) ஆகும். அருகிலுள்ள தொடருந்து நிலையம் திருவனந்தபுரம் தொடருந்து நிலையம் (30 கி.மீ) ஆகும்.

நெய்யாறு அணையை அடைவது எப்படி:

திருவனந்தபுரம் நகரத்திலிருந்து பொதுவாக பேருந்து வசதி உள்ளது, அருகிலுள்ள தொடருந்து நிலையமானது  நெய்யாறு அணையில் இருந்து 32 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரத்தில் உள்ளது. திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து நெய்யாறு அணை 38  கி.மீ. தொலைவில் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 South India Handbook By Roma Bradnock
  2. "National Register of Large Dams - India" (PDF). Central Water Commission. p. 84. 21 July 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 April 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்யாறு_அணை&oldid=3038539" இருந்து மீள்விக்கப்பட்டது