பெரிங்கல்குத்து அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெரிங்கல்குத்து அணை
പെരിങ്ങൽകുത്ത് അണക്കെട്ട്.jpg
பெரிங்கல்குத்து அணையின் கதவணைகள்
அதிகாரபூர்வ பெயர்Peringalkuthu Dam
அமைவிடம்கேரளம், திருச்சூர், சாலக்குடி
புவியியல் ஆள்கூற்று10°18′55″N 76°38′04″E / 10.3152°N 76.6344°E / 10.3152; 76.6344ஆள்கூறுகள்: 10°18′55″N 76°38′04″E / 10.3152°N 76.6344°E / 10.3152; 76.6344
கட்டத் தொடங்கியது1949
திறந்தது15 மே 1957
இயக்குனர்(கள்)கேரள மாநில மின்சார வாரியம்
அணையும் வழிகாலும்
Impoundsசாலக்குடி ஆறு
உயரம்23 மீட்டர்
நீளம்290.25 மீட்டர்
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்சாலக்குடி ஆறு

பெரிங்கல்குத்து அணை (Peringalkuthu Dam) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், திருச்சூர் மாவட்டத்தில், சாலக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு கற்காரை அணை ஆகும்.[1] இந்த அணையில் கேரள மாநில மின்சார வாரியத்துக்குச் சொந்தமான பெரிங்கல்குத்து நீர் மின் நிலையம் உள்ளது. சாலக்குடி ஆற்றில் கட்டபட்ட முதல் நீர் மின்சார திட்டம் இதுவாகும். அணை அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. இதனால் அணையை பார்வையிட சிறப்பு அனுமதி தேவை. [2] [3] [4] [5] [6]

பெரிங்கல்குத்து இடது கரை நீட்டிப்பு[தொகு]

பெரிங்கல்குத்து இடது கரை விரிவாக்க திட்டம் பெரிங்கல்குத்து நீர்த்தேக்கத்திலிருந்து கூடுதல் அழுத்தக் குழாய் போடுவதன் மூலம் செய்யப்பட்டது. மேலும் இது கடுமையான பருவமழையின் போது அணையில் இருந்து கசிவைத் தவிர்ப்பதற்காகவும் செய்யப்பட்டது. மின் நிலையமானது 16 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகைக் கொண்டுள்ளது. மின் உற்பத்திக்குப் பிறகு, நீரானது சாலக்குடி ஆற்றில் விடப்படுகிறது. [7]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிங்கல்குத்து_அணை&oldid=3037956" இருந்து மீள்விக்கப்பட்டது