தாத்தமங்கலம் குதிரை வேலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாத்தமங்கலம் குதிரை வேலா அல்லது அங்கடி வேலா (Tattamangalam Kuthira Vela அல்லது Angadi Vela) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தாத்தமங்கலம் என்ற சிற்றூரில் நடத்தப்படும் ஒரு திருவிழா. மலையாள மொழியில் குதிரா என்றால் " குதிரை " என்றும் வேலா என்றால் "திருவிழா" என்றும் பொருள். திருவிழாவின் போது, உள்ளூர் மக்களால் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. குதிரை செலுத்துபவர்கள் அண்டை மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இங்கு கரியால் கருப்பு நிறத்தை உடலில் பூசிக்கொண்ட பல தன்னார்வலர்களைக் காணலாம்; இந்த ஆடவர் பந்தயத்தைக் காண்பதற்காக சாலையோரம் நிற்கும் மக்களைக் கட்டுப்படுத்தும் காவலர்கள் ஆவர். இது கரி வேலா என்றும் அழைக்கப்படுகிறது.

குதிராவேலா 2005 இல் உடல் வர்ணம் பூசப்பட்ட ஆண்கள்

குதிரை வேலாவின்போது, மாநில நெடுஞ்சாலை 27 இன் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் கே.எஸ்.இ.பி. அலுவலகத்திலிருந்து வேட்டக்கருப்பன் சுவாமி கோயில் வரை கூடுகிறார்கள்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]