உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கடா கோயிலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கடா கோயிலகம் அல்லது மங்ஙடா கோயிலகம் (Mankada Kovilakam) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புறம் மாவட்டம், மங்கடாவில், மஞ்சேரி சாலையில் உள்ள ஒரு அரண்மனையானயாகும். இந்த அரண்மனையானது அந்தக் கால கதவுகள், படிப்புறா என்னும் கேரள பாரம்பரிய வீட்டு வாயில்களில் உள்ள பொதுவான தங்கும் அறை ஆகியவற்றை கடந்துவந்து இந்த கோயிலகத்தைக் காணலாம். இந்த அரண்மனையில் வரலாற்றுக் கால பாதாள பூட்டு, திறவுகோள் போன்றவை உள்ளன. கோயிலகத்தைச் சுற்றிலும் வீடுகள் அமைந்துள்ளன. இந்த வீடுகளின் வராந்தாவிலுள்ள தூண்கள், உத்திரங்கள் போன்றவை தேக்கினால் செய்யபட்டவை. கேரள எட்டுக்கட்டு பாணில் கட்டபட்ட இதில் இரண்டு முற்றங்கள் உள்ளன. எட்டுக் கட்டின் கட்டடா பாணியானது மலப்புறம் பகுதியில் உள்ள ஆழிரம் நாழி, மன்கடா, மஞ்சேரி, கடன்மன்னனா ஆகிய நன்கு கோயிலகங்களின் சாயலைக் கொண்டுள்ளது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. கேரளா ஒரு சுற்றுலா பார்வை, வீ. கே. டி. பாலன், பக்கம் 325 மதுரா வெளியீடு, 2005, சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கடா_கோயிலகம்&oldid=3047424" இலிருந்து மீள்விக்கப்பட்டது