உள்ளடக்கத்துக்குச் செல்

வாகுவராய்

ஆள்கூறுகள்: 10°10′39″N 77°06′21″E / 10.177485948304167°N 77.10582230240107°E / 10.177485948304167; 77.10582230240107
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாகுவராய்
நகரம்
வாகுவராய் is located in கேரளம்
வாகுவராய்
வாகுவராய்
Location in Kerala, India
வாகுவராய் is located in இந்தியா
வாகுவராய்
வாகுவராய்
வாகுவராய் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°10′39″N 77°06′21″E / 10.177485948304167°N 77.10582230240107°E / 10.177485948304167; 77.10582230240107
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்இடுக்கி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்,
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசி குறியீடு91 – 4865
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KL
வாகனப் பதிவுKL
இணையதளம்kdhptea.com/vagavurrai.html

வாகவுர்ராய் அல்லது வாகுவராய் (Vagavurrai அல்லது Vaguvarrai) என்பது இந்தியாவின் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது மூணாருக்கு வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில. நெடுஞ்சாலை எண் 17 இல் மறையூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளளது. இச்சாலை மூணாரைத்தை தமிழ்நாட்டின் உடுமலைப்பேட்டையுடன் இணைக்கிறது. புவியியல் ரீதியாக, இது மூணாரிலிருந்து சுமார் 25 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இதன் ஒருபுறம் மாட்டுப்பட்டி அணையும், மறுபுறம் தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரமுமான ஆனைமுடியும் அமைந்துள்ளன. முணார் - டாப் ஸ்டேஷன் சாலை வழியாகவும் இதை அடையலாம். இந்த பகுதி முழுவதும் தாவரங்களும், விலங்கினங்களும் உள்ளன. கவர்ச்சிமிக்க மலர் தாவரமான ரோடோடென்ட்ரான்கள் வாகுவராய் மற்றும் குண்டுமலையின் சில பகுதிகளில் காணப்படுகின்றன, மேலும் வாகவுரையில் குறிஞ்சியை அதிகம் பார்க்கலாம். இப்பகுதியில் யானை, காட்டெருது, சருகுமான், கடமான், முள்ளம்பன்றி போன்ற ஏராளமான வனவிலங்குகளுக்கும் பெயர் பெற்றது.

பெயராய்வு

[தொகு]

வாகவுர்ராய் என்ற இதன் பெயரானது வாகா (பொதுவாக மலேரியா மலர் என்று அழைக்கப்படுகிறது) என்பதிலிருந்து உருவானது

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகுவராய்&oldid=3042959" இலிருந்து மீள்விக்கப்பட்டது