வல்லர்பாடம்
வல்லர்பாடம் | |
---|---|
தீவு | |
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Kochi" does not exist. | |
ஆள்கூறுகள்: 9°59′24″N 76°15′18″E / 9.990°N 76.255°Eஆள்கூறுகள்: 9°59′24″N 76°15′18″E / 9.990°N 76.255°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எர்ணாகுளம் |
அரசு | |
• நிர்வாகம் | முலுவாக்குடு பஞ்சாயத்து |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
தொலைபேசி குறியீடு | 0484 |
வாகனப் பதிவு | KL-7 |
City | Kochi |
மக்களவை தொகுதி | எர்ணாகுளம் |
குடிமை முகமை | முலுவாக்குடு பஞ்சாயத்து |
வல்லர்பாடம் (மலையாளம் : വല്ലാർപാടം) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில், கொச்சியின் ஒரு பகுதியாக விளங்கும் தீவுக் கூட்டங்களில் உள்ள ஒரு தீவாகும். இது வேம்பநாட்டு ஏரியில் அமைந்துள்ளது. இது கொச்சி ஏரி என்றும் அழைக்கபடுகிறது. 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ள இரண்டு தீவுகளில் வல்லர்பாடம் தீவும் ஒன்றாகும், மற்றொன்று வில்லிங்க்டன் தீவு ஆகும் இதைச் சுற்றி கொச்சி துறைமுகம் அமைந்துள்ளது. துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் நிலையம் முழுக்க வல்லர்பாடம் தீவில் அமைந்துள்ளது. வைப்பீன் தீவு இதன் மேற்குப் பக்கத்திலும், முலவுகாட் தீவு இதன் கிழக்கிலும் அமைந்துள்ளன.
சாலை போக்குவரத்து[தொகு]
கோஷ்ரி பாலங்கள் நகர மையம் மற்றும் வைப்பீன் தீவு ஆகியவற்றுடன் வல்லர்பாடம் தீவை இணைக்கின்றன. தனியார் பேருந்துகள், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், தானி போன்றவை தீவுக்கும் கொச்சி நகரத்துக்கும் இடையில் இயக்கப்படுகின்றன. நான்கு வழிச் சாலையான தே. நெ என். 47 சி, வல்லர்பாடத்தை தேசிய நெடுஞ்சாலை 47 உடன் கலாமாசேரி சந்தியில் 17.2 கிலோமீட்டர் (10.7 மைல்) தொலைவில் இணைக்கிறது. வல்லர்பாடம் தே. நெ 17 மற்றும் தே. நெ 47 என இரண்டு சாலைகள் வழியாகவும் எளிதில் அணுகக்கூடியது.
தொடருந்து போக்குவரத்து[தொகு]
2009 முதல், வல்லர்பாடம் இடப்பள்ளி தொடருந்து நிலையத்துடன் 4620 மீட்டர் நீளமுள்ள தொடருந்து பாலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1] தொர்வண்டிப் பாதை இணைப்பானது பன்னாட்டு சரக்கு பெட்டக கொள்கலன் நிலையத்தில் இருந்து கொள்கலன்களை கொண்டு செல்வதற்காக உருவாக்கபட்டது.
பொருளாதாரம்[தொகு]
தீவின் 70% பகுதி நெல் கழனிகளைக் கொண்டுள்ளது; தீவின் பொருளாதாரமானது முக்கியமாக நெல் சாகுபடியையும், பாரம்பரிய முறைகள் மூலம் உள்நாட்டு மீன்பிடித்தலையும் சார்ந்துள்ளது. குறிப்பாக வலைகட்டு என்று அழைக்கபடும் தனிச்சிறப்பாக பிண்ணப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தலானது, தீவாரா எனப்படும் மீனவர் சமூகத்தின் முக்கிய வருவாயாகும்.
காணத்தக்க இடங்கள்[தொகு]
வல்லர்பாடத்தில் உள்ள புனித அன்னை மரியா பெருங்கோயில் என்பது மாநிலத்தின் ஒரு முக்கிய கத்தோலிக்க யாத்ரீக மையமாகும். ஆதிக்கண்டம் பகவதி கோயில், வல்லர்பாடம் தீவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பகவதி கோயில் ஆகும், இது பனம்புக்காடு என்று அழைக்கப்படுகிறது..
மேலும் காண்க[தொகு]
குறிப்புகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- வல்லார்பாடம்: கேரளாவின் வளர்ச்சியின் மையம் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்