இலவீழபூஞ்சிரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Top view Ilaveezha poonchira
இலவீழபூஞ்சிராவின் உச்சியிலிருந்து தோற்றம்

இலவீழபூஞ்சிரா (Ilaveezha Poonchira) என்பது கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் காஞ்ஞாருக்கு அருகில் உள்ள மெலுகாவ் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா தலம் ஆகும். இலவீழ பூஞ்சிரா மூன்று அழகிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. அவை மண்குன்னு, கொடையத்தூர்மல் மற்றும் தோணிப்பாரா என்பவையாகும். இது மலையேற்றத்திற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது. [1]

சொற்பிறப்பு[தொகு]

"இல-வீழா-பூஞ்சிரா", என்பதன் பொருள் 'இலைகள் விழாத பூக்களின் குளம்' என்பது ஆகும். மழைக்காலங்களில், மலைகளுக்கு இடையிலான பள்ளத்தாக்கில் ஒரு பெரிய குளம் உருவாகிறது. [2]

சுற்றுலா[தொகு]

இலவீழபூஞ்சிரா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சுற்றுலா தலமாகும். இது கேரளத்தின், இடுக்கி கோட்டயம் மாவட்டங்களின், எல்லையில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இது இது கடல் மட்டத்திலிருந்து 6,500 அடி உயரத்தில் உள்ளது. இது பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளால் சூழப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

ஒரு தொன்மத்தின்படி, பாண்டவர்கள் தங்கள் அஞ்சாத வாசத்தின்போது இங்கு மறைந்து வாழ்ந்தனர். இவர்களின் மனைவியான திரௌபதி, அந்த நேரத்தில் இங்கு இருந்த ஒரு ஏரியில் குளிக்க வந்தார். சில தேவர்கள், அவளுடைய அழகால் மயங்கி, அவளின் அழகைக் காமக் கண்கொண்டு கண்டு ரசித்து தங்கள் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முயன்றனர். தேவர்களின் அரசனான, இந்திரன், என்ன நடக்கிறது என்பதை அறிந்து, அவர்கள் அவளைப் பார்க்க இயலாதவாறு மலர்த் திரைகளை மலைபோல அமைத்து அவர்கள் பார்ப்பதைத் தடுத்தார். இதனால் குளம் மலர் மலைகளால் சூழப்பட்ட அணையாக மாறியது. குளத்தைச் சுற்றி மரங்கள் இல்லாததால், அது எப்போதும் இலைகளற்றதாக இருந்தது, எனவே இது இல-வீழா-பூஞ்சிரா என்று அழைக்கப்பட்டது. அந்த இடத்தில் எப்போதும் காற்று வீசுவதால் இலைகளை கொண்டு சென்றுவிடுகிறது எனவே இந்த பெயர் வந்துது என்று சிலர் கூறுகிறார்கள். [3]

தொன்மவியல்[தொகு]

பூஞ்சிரா குறித்த தொன்மமானது அகத்தியருடனும் அவரது பர்ணசாலையுடனும் நெருங்கிய தொடர்புடையது. அவர் இங்கு வாழ்ந்தார், அவர் இன்னும் இங்கேயே வாழ்கிறார்கள் என்று பூர்வீக மக்கள் நம்புகிறார்கள், அவருடைய பர்ணசாலை இங்கேயே எங்கோ மறைந்துள்ளது என்று நம்புகின்றனர். இங்கு உள்ள மற்றொரு முக்கியமான இடம் பண்டைய கிருஷ்ணன் கோயில் ஆகும், இது பஞ்சலியால் நிறுவப்பட்டது எனப்படுகிறது. பஞ்சலியின் அட்சயப்பாத்திரம் இங்கே மறைக்கப்பட்டுள்ளது என்றும் அது அகத்தியரால் பாதுகாக்கப்படுகிறது என்பது வெகுஜன நம்பிக்கை. மேலும் இந்த இடம் இராமாயண தொன்மத்துடன் தொடர்புடையது, இராமன வனவாசத்தின்போது அவர் சில மாதங்கள் இங்கே லட்சுமணருடன் வாழ்ந்தார் என்றும் நம்புகிறனர்

இருப்பிடம்[தொகு]

இலவீழபூஞ்சிராவானது   கோட்டயத்திலிருந்து 55 கி.மீ. தொலைவிலும்,   தொடுபுழாவிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இலவீழபூஞ்சிராவிலிருந்து, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா, பத்தனம்திட்டா , திருச்சூர் மாவட்டங்களின் பெரும் பகுதிகளைக் காண இயலும். கேரளத்தில் சூரிய உதயத்தையும் சூரியன் மறைவையும் பார்க்கக்கூடிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

குறிப்புகள்[தொகு]

  1. "Ilaveezha Poonchira in Keralatourism.org". மூல முகவரியிலிருந்து 2013-09-01 அன்று பரணிடப்பட்டது.
  2. "Kerala Tourism Destionations". மூல முகவரியிலிருந்து 13 July 2011 அன்று பரணிடப்பட்டது.
  3. "Ilaveezha Poonchira". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலவீழபூஞ்சிரா&oldid=3234917" இருந்து மீள்விக்கப்பட்டது