தேக்கு அருங்காட்சியகம்
தேக்கு அருங்காட்சியகம் (Teak Museum) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தில், நீலம்பூரில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்தியாவில் இயற்கையாகவே தேக்குக் காடுகள் காணப்படும் பகுதிகள் கொண்டது கேரளம் ஆகும். [1]
இரண்டு மாடி கட்டடத்தில் உள்ள இந்த அருங்காட்சியகம் உலகின் முதல் தேக்கு அருங்காட்சியகமாகும், இது கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் தேக்கு பயன்பாட்டின் அம்சங்கள் மற்றும் தேக்கு குறித்த அ முதல் ஃ வரையிலான அனைத்து தகவல்களும் உள்ளன. இந்த அருங்காட்சியகம் வரலாற்று ரீதியாகவும், கலை ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் விரிவான தகவல்களை வழங்குகிறது. [2]
கேரள வன ஆராய்ச்சி நிறுவன மையத்தின் வளாகத்தில் 1995 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது, ஏனெனில் இந்த பகுதி தேக்கு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் முதல் தேக்கு தோட்டம் 1840 களில் நிலம்பூரில் ஆங்கிலேயர்களால் உருவாக்கபட்டது. [3]
அமைவிடம்
[தொகு]. இது நிலாம்பூருக்கு அருகிலுள்ள மஞ்சேரி- உதகை சாலை பகுதியில் அமைந்துள்ளது மற்றும் சுற்றுண்சுவரால் பாதுகாக்கப்படுகிறது.
பார்வை நேரம்
[தொகு]அருங்காட்சியகத்தின் விடுமுறை நாளான திங்கள் தவிர அனைத்து நாட்களிலும் பார்வையாளர்கள் காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.
அருகிலுள்ள தொடருந்து நிலையம் தேக்கு அருங்காட்சியகத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் நிலம்பூரில் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் கரிப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும் இது மலப்புரத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது. [4]
படக்காட்சியகம்
[தொகு]-
தேக்கு அருங்காட்சியகம்
-
இயற்கைப் பூங்கா
-
அருங்காட்சியகத்தின் பின்புறம்
-
நான்காவது தோட்டம்
-
நான்காவது தொட்டத்தின் உள்ளே
குறிப்புகள்
[தொகு]- ↑ "Teak Museum". Kerala Forest Research Institute. Archived from the original on 2006-09-28. பார்க்கப்பட்ட நாள் 2006-10-13.
- ↑ "Nilambur(Forest area) - Teak Museum". Malappuram.net. பார்க்கப்பட்ட நாள் 2006-10-13.
- ↑ Museums of Kerala - Teak Museum, Nilambur, Indiatourism.com
- ↑ "Teak Museum,Nilambur". Keralatourism.org. பார்க்கப்பட்ட நாள் 2006-10-13.