லாக்ஹார்ட் தேயிலை அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாக்ஹார்ட் தேயிலை அருங்காட்சியகம்
Lockhart Tea Museum.jpg
நிறுவப்பட்டதுசனவரி 22, 2014 (2014-01-22)
அமைவிடம்கேரளம், இடுக்கி மாவட்டம் மூணார்
வகைதேயிலை அருங்காட்சியகம், தொழில் மற்றும் வரலாற்று அருங்காட்சியகம்
உரிமையாளர்ஹாரிசன்ஸ் மலையாளம் லிமிடெட்
வலைத்தளம்http://lockhartteamuseum.business.site


லாகார்ட் தேயிலை அருங்காட்சியகத்தில் (Lockhart Tea Museum) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், மூணாரில் அமைந்துள்ள அருங்காட்சிகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் உள்ள கட்டடமானது 1936 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது மீனாரில் இருந்து தேக்கடி சாலையில் 9 km (5.6 mi) தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் 22 ஜனவரி 2014 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகம் லாக்ஹார்ட் தேயிலைத் தோட்டத்தின் ஒரு பகுதியாகும். [1] இது 1879 ஆம் ஆண்டில் பரோன் ஜான் வான் ரோசன்பெர்க் மற்றும் அவரது மகன் பரோன் ஜார்ஜ் ஓட்டோ வான் ரோசன்பெர்க் [2] ஆகியோரால் நிறுவப்பட்ட மூணாரின் ஆரம்பகால தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாகும். துவக்கத்தில் அவர்கள் சின்கொய்னாவையும் பின்னர் காபியையும், பின்னர் தேயிலையும் நட்டனர்.

லாக்ஹார்ட் தேயிலை தொழிற்சாலை ஆண்டுதோறும் சுமார் 20 மில்லியன் கிலோகிராம் தேயிலையை உற்பத்தி செய்கிறது [3] இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேயிலை சாகுபடிசெய்யும் நிறுவனமான ஹாரிசன்ஸ் மலையாளம் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது [4] [5] . தொழிற்சாலையின் வேலை நேரங்களில் பொதுமக்கள் அருங்காட்சியகத்தைப் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர்கள் தேயிலையை பல்வேறு நிலைகளில் பதப்படுத்துவதை கவனிக்க வாய்ப்பளிக்கின்றனர். மூந்தைய காலத்தில் தேயிலை உற்பத்தி குறித்த ஒளிப்படங்கள், அக்காலத்திய இயந்திரங்கள் போன்றவை இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

இந்த தொழிற்சாலையும் அருங்காட்சியகமும் தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றான சொக்கர்முடியின் சரிவுகளில் அமைந்துள்ளது. இதிலிருந்து லாக்ஹார்ட் பள்ளத்தாக்கு முழுவதையும் காணலாம்.

இடமிருந்து வலமாக மூன்றாவதாக நிர்பவர் போரோன் வான் ரோசன்பர்க்
1879 ஆம் ஆண்டில் மூனாரின் முதல் தோட்டக்காரராக இருந்த ஓட்டோ ஜார்ஜ் ஜான் மைக்கேல் பரோன் வான் ரோசன்பர்க்கின் கல்லறை

குறிப்புகள்[தொகு]