கன்னியர்களி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னியர்களி (Kanniyar Kali) கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தின் ஆலத்தூர் மற்றும் சிற்றூர், தாத்தமங்கலம் வட்டத்தில் உள்ள கிராமங்களின் கோயில்களில் நிகழ்த்தப்படும் ஒரு நாட்டுப்புற நடனச் சடங்காகும். இந்த நிகழ்வு பொதுவாக கிராமத்தின் விஷூ கொண்டாட்டங்களின் (மலையாள மாதப்பிறப்பு) ஒரு பகுதியாகும். இது பொதுவாக கிராமங்களில் நடக்கும் கண்காட்சியில் நடத்தப்படுகிறது. பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்த்தப்படுகிறது. இது நாயர் சமூகத்தின் விவசாயத் திருவிழா நடனமாகும். [1] கன்னியர்களிக்கு, கன்னி என்றப் பெயர் இருந்தாலும், கண்ணகி வழிபாட்டுடன் இதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. [2] இந்த நிகழ்ச்சி சமூகத்தின் ஒரு பழமைவாத பார்வையை எடுத்துக்காட்டுகிறது. இது ஒருவருக்கொருவர் எதிரொலிக்கும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை உறுதிப்படுத்துவதன் மூலம் குறிக்கப்படுகிறது. [3]

கன்னியர்களியின் எரட்டகுடான் புரட்டு

கன்னியர்களி என்பது கேரளாவின் உண்மையான ஜோதிடர்களின் சமூகமான கனியர் சமூகத்துடன் எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை. [4]

நடனம்[தொகு]

இந்த நடனம் ஒரு இரவில் நிகழ்த்தப்பட்டு விடியற்காலையில் முடிவடைந்து விடும். இது தொடர்ச்சியாக நான்கு இரவுகள் நடத்தப்படுகிறது. சில கிராமங்களில் இது மூன்று இரவுகளுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. ஒவ்வொரு இரவும் சமூகத்தின் ஆண்கள் கோயில்களில் கூடி, வட்டக்களி (வட்டக்களி என்றால் வட்ட வட்ட நடனம் என்று பொருள்) என்ற தாள வட்ட நடனத்தை நிகழ்த்துவதன் மூலம் நடனங்கள் தொடங்குகின்றன. வட்டகளியைத் தொடர்ந்து பல புரட்டு [5], அதாவது பரிகாசம் என்று பொருள் படும்.

புரட்டல்கள்[தொகு]

புரட்டுக்கு நிலையான வடிவம் இல்லை. ஒவ்வொரு புரட்டும் தோராயமாக ஒரு மணி நேரம் நீடிக்கும். புரட்டு இடைக்கால கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு சாதிகள் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் சமூக பழக்கவழக்கங்களை சித்தரிக்கிறது. புரட்டு பல்வேறு பன்முக சாதிகள் மற்றும் பழங்குடியினரை சித்தரிப்பதால், பல்வேறு புரட்டல்களில் வெவ்வேறு உடைகள், நடனம் மற்றும் வெவ்வேறு வகையான பாடல்கள் உள்ளன. மூர்க்கமான பழங்குடியினர் அல்லது போர்வீரர் பழங்குடியினரை சித்தரிக்கும் சில புரட்டுகளில் குச்சி சண்டைகள் மற்றும் தற்காப்பு இயக்கங்களை ஒத்த நிகழ்ச்சிகள் உள்ளன. அதே சமயம் வேறு சில புரட்டல்களும் மெதுவான மற்றும் தாள இயக்கங்களைக் கொண்டுள்ளன. சில புரட்டல்கள் நகைச்சுவை உணர்வுடையவையாக நடத்தப்படுகிறது. மேலும் புரட்டல்கள் நீண்ட காலமாக பிரிந்திருந்த கணவன்-மனைவி மீண்டும் இணைந்த ஒரு காட்சியை சித்தரிக்கின்றன. [6]

நிகழ்ச்சி[தொகு]

இது பந்தல் எனப்படும் விசேஷமாக தயாரிக்கப்பட்ட சதுர கட்டத்தில் நடத்தப்படுகிறது. இது கோயில் அல்லது அதன் வளாகத்தின் முன் அமைக்கபடும். இது மையத்தில் ஒளிரும் விளக்கைக் கொண்டுள்ளது. மேலும் ஒன்பது தூண்களால் தான்கி நிற்கும் ஒரு கூரையைக் கொண்டுள்ளது. பாடகர்கள் மேடையின் மையத்தில் நிலையை ஆக்கிரமித்து நிகழ்ச்சியை வழங்குவர். மற்ற நடனக் கலைஞர்கள் பந்தலின் வெளிபுறத்தில் வட்ட வடிவத்தில் நடனமாடுகிறார்கள்.

பாடல்கள்[தொகு]

பாடல்கள் பெரும்பாலும் மலையாள மொழியில் உள்ளன. சில புரட்டல்களில் தமிழ்ப் பாடல்களின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. அதனுடன் வரும் கருவிகள் எலதாளம், செண்டை மற்றும் செங்காளம் போன்றவை. மத்தளம் என்பது வட்டக்களியில் வாசிக்கப்படும் ஒரு துணை இசைக் கருவியாகும். .

உடை[தொகு]

இதில் பங்கேற்பவர்கள் முழுக்க முழுக்க ஆண்கள் மற்றும் பெண்கள் குறுக்கு உடையால் குறிப்பிடப்படுகிறார்கள். ஆண்கள் தங்கள் உடல் மொழியையும் பெண்களைப் பற்றி பேசும் முறையையும் பின்பற்றுவார்கள்.

குறிப்புகள்[தொகு]

  1. Malayalam Literary Survay, Volume 1, Issue 2-4. Kerala Sahithya Akademi, 1977. பக். 185. 
  2. A Handbook of Kerala, Volume 2. International School of Dravidian Linguistics, 2002. பக். 423. 
  3. https://hal.archives-ouvertes.fr/hal-00520537/
  4. Chummar Choondal. Studies in Folklore of Kerala. College Book House. பக். 78. 
  5. "http://bp2.blogger.com/_pPLZpYqWVgY/SIMjFHRJY2I/AAAAAAAAABw/1zW7qQv-Gm0/s1600-h/1.jpg". {{cite web}}: External link in |title= (help)
  6. https://hal.archives-ouvertes.fr/hal-00520537/

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kanyarkali
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னியர்களி&oldid=3320611" இலிருந்து மீள்விக்கப்பட்டது