பரவூர் ஏரி
பரவூர் ஏரி பரவூர் காயல் | |
---|---|
பரவூர் ஏரியின் மாலைநேரக் காட்சி | |
அமைவிடம் | பரவூர், கேரளம் |
ஆள்கூறுகள் | 8°49′19″N 76°39′32″E / 8.822°N 76.659°E |
பூர்வீக பெயர் | 'പരവൂർ കായൽ' (மலையாளம்) |
முதன்மை வரத்து | இத்திக்கரை ஆறு |
வடிநிலப் பரப்பு | 6.6246 km2 (2.56 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா இந்தியா |
மேற்பரப்பளவு | 6.62 km2 (2.56 sq mi) |
பரவூர் காயல் அல்லது பரவூர் ஏரி (Paravur Lake) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பரவூரில் அமைந்துள்ள ஓர் ஏரி.[1] இது 6.62 கி.மீ² பரப்பளவை மட்டுமே கொண்டு சிறியதாக இருந்தாலும்,[2] இத்திக்கரை ஆற்றின் இறுதிப் புள்ளியாகவும், கேரள உப்பங்கழிகளை உருவாக்கும் ஏரிகள் மற்றும் கால்வாய்களின் ஒரு பகுதியாகவும் உள்ளது. திருவனந்தபுரம் - சோரனூர் கால்வாய் அமைப்பின் ஒரு பகுதியாக, எடவா மற்றும் அஷ்டமுடி காயலுடன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதலே இது இணைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா ஈர்ப்பு
[தொகு]இந்த ஏரிக்கும் கடலுக்கும் இடையில் அவற்றைப் பிரிக்கும் ஒரு சிறிய சாலை, ஏரி கடலைச் சேருமிடத்தில் காணப்படுகிறது.[3][4] அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பரவூர் ஏரி, கொல்லம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் சுற்றுலா இடங்களில் ஒன்று.[5]
பறவைப் பார்வையில் இந்த இடத்தின் அகலப்பரப்பு காட்சியைக் வானிலிருந்து பார்ப்பதைவிட இதன் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மலை அடுக்குகளிலிருந்து பார்க்கலாம். புகழ்பெற்ற லேக்சாகர் சேவியர் உல்லாச விடுதி பரவூர் ஏரியின் கரையில் அமைந்துள்ளது. பிரியதர்ஷினி படகுக் குழு இந்த ஏரியின் அருகில் இருக்கும் மற்றொரு சுற்றுலா ஈர்ப்பு இடமாகும். ஏரியின் இருபுறமும் இருக்கும் அலையாத்திக் காடுகளும் மிகவும் புகழ்பெற்றவை.[6]
போக்குவரத்து
[தொகு]பரவூர் நகரிலிருந்து 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) தொலைவில் பரவூர் ஏரி அமைந்துள்ளது. பரவூர்-எடவா-வர்க்கலை சாலை இந்த ஏரியின் கரைகளின் ஊடாகச் செல்கிறது. பரவூர் நகராட்சிப் பேருந்து நிலையமும் தொடர்வண்டி நிறுத்தமும் ஏரியிலிருந்து 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) தொலைவில் உள்ளன. பரவூர் ஏரிக்கு அருகிலிருக்கும் தொடர்வண்டி நிறுத்தம் பரவூர் தொடர்வண்டி நிலையமாகும். ஒவ்வொரு நாளும் பதினான்கு தொடர்வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன. அருகிலுள்ள முதன்மைத் தொடர்வண்டித் தலைமையகமாக கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம் ஏரியிலிருந்து 26 கிலோமீட்டர்கள் (16 mi) தொலைவில் உள்ளது. அருகிலுள்ள பேருந்து நிலையம் 12 கி.மீ. தொலைவில் உள்ள கேரள மா.சா.போ.கவின் சாத்தன்னூர் பேருந்து நிலையமாகும்.