கேரள ஆறுகளின் பட்டியல்
கேரளத்தில் மொத்தம் 44 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் 41 ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி வருகின்றன.[1]
கேரளத்தின் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளும் அவற்றின் துணையாறுகளும் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன. இந்த ஆறுகள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து கேரளக் காயல்களிலோ அல்லது அரபிக்கடலிலோ சென்று சேர்கின்றன. ஆறுகளின் நீளம் கிலோ மீட்டர்களில் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
கபினி, பவானி, பம்பார் ஆகியன கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. இவற்றுள் கபினி கர்நாடகத்திற்கும் மற்ற இரண்டும் தமிழ்நாட்டிற்குள்ளும் பாய்கின்றன.
- பெரியாறு (244)
- பாரதப்புழா (209)
- பம்பா ஆறு (196)
- சாலியாறு (169)
- சாலக்குடிப்புழா (169)
- கடலுண்டிப்புழா (130)
- அச்சன்கோவிலாறு (128)
- கல்லடா ஆறு (121)
- மூவாற்றுபுழாயாறு (121)
- வளப்பட்டணம் ஆறு (110)
- சந்திரகிரி புழா (105)
- மணிமலையாறு (90)
- வாமனபுரம் ஆறு (88)
- குப்பம் ஆறு (88)
- மீனச்சிலாறு (78)
- குற்யாடி ஆறு (74)
- கரைமனையாறு (68)
- ஷிரீய ஆறு (68)
- கரிங்கோட் ஆறு (64)
- இத்திக்கரையாறு (56)
- நெய்யாறு (56)
- மாகிப்புழா (54)
- கீச்சேரி ப்புழா (51)
- பிரம்பா ஆறு (51)
- உப்பாள ஆறு (50)
- கருவண்ணூர் ஆறு (48)
- அஞ்சரக்கண்டியாறு (48)
- திரூர் புழா (48)
- நிலேஷ்வரம் ஆறு (46)
- பள்ளிக்கல் ஆறு (42)
- கோரப்புழா (40)
- மோக்ரால் ஆறு (34)
- காவேரிப்புழா (31)
- புழாக்கல் ஆறு (29)
- மானம் ஆறு (27)
- தலச்சேரி ஆறு (28)
- சிற்றேரி ஆறு (25)
- கல்லாயிப்புழா (22)
- ராமபுரம் ஆறு (19)
- அயிரூர் ஆறு (17)
- பாங்கர மஞ்சேசுவர ஆறு (16)
ஆதாரம்[தொகு]
- ↑ "Kerala Government - General Features". Kerala Government Official Site. 2006-11-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-10-13 அன்று பார்க்கப்பட்டது.