மீனச்சிலாறு
Appearance
மீனச்சில் ஆறு கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தின் ஊடாகப் பாயும் ஓர் ஆறு. ஆற்றின் நீளம் 78 கிலோமீட்டர்கள். இவ்வாறு ஈராட்டுப்பேட்டை, பாலை, எட்டுமனூர், கோட்டயம் ஆகிய ஊர்களின் வழியே ஓடி பின்னர் வேம்பநாட்டு ஏரியில் சேர்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி ஓடி வரும் பல ஓடைகள் சேர்ந்து மீனச்சில் ஆறு உருவாகிறது. இவ்வாற்றின் நீர்ப்படுகை 1208.11 சதுர கிலோமீட்டர்கள். ஆண்டுக்கு 2349 மில்லியன் கனமீட்டர் நீரைத் தருகிறது. மீனச்சில் ஆறு மொத்தம் 38 துணையாறுகளைக் கொண்டுள்ளது.
இந்த ஆறு அருந்ததி ராய் எழுதிய த காட் ஆஃப் சுமால் திங்க்சு என்ற புதினத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ "Stagnant Meenachil River dying a slow death". பார்க்கப்பட்ட நாள் 29 திசம்பர் 2015.