புன்னப்புழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புன்னப்புழா (மலையாளம்:പുന്നപ്പുഴ) கேரள மாநிலத்தில் பாயும் கரிம்புழாவின் துணையாறு. கரிம்புழா சாலியாற்றின் துணையாறுகளுள் மிகவும் பெரியது. புன்னப்புழா தமிழ்நாட்டில் பாயும் போது பாண்டியாறு என அழைக்கப்படுகிறது.

இதன் ஒரு கிளை முக்கூர்த்தி தேசியப்பூங்காவின் வடபகுதியிலும் மற்றோர் கிளை தமிழ்நாட்டின் நீலகிரியில் உள்ள கூடலூரிலும் தோன்றுகின்றன. இவ்விரு கிளைகளும் கூடலூருக்கு தென்மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் கூடுகின்றன. இந்த ஆறு இடக்கரை என்ற இடத்தை அடையும் போது மருதப்புழா இதனுடன் சேர்கிறது. பின்னர் இது கரிம்புழா ஆற்றுடன் கூடி முடிவடைகிறது.

சுங்கத்தரை, இடக்கரை ஆகியன இவ்வாற்றின் கரையில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க ஊர்களாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்னப்புழா&oldid=1349110" இருந்து மீள்விக்கப்பட்டது