திரூர் ஆறு
திரூர் ஆறு (Tirur River) அல்லது திரூர்-பொன்னானி ஆறு தென்னிந்தியாவில் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் திரூர் வட்டத்திள்ள அதவநாட்டில் தொடங்கி திருநாவாயின் தென்மேற்கில் பாய்கிறது. பின்னர், தென்மேற்கே அளிஞ்சுவட்டில் திரும்பி திரூர் நகரம் வழியாக இளங்குளத்தை அடைந்து, இறுதியாக பாரதப்புழாவுடன் சேர்கிறது. இது கடலோர நகரமான பொன்னானிக்கு அருகிலுள்ள அரபிக் கடலில் கலக்கிறது. [1] இந்த ஆறு அழகிய சதுப்பு நிலங்களுக்கும், பல வகையான மீன்கள், பறவைகளுக்குப் பெயர் பெற்றது. [2]
படகு போக்குவரத்துக்கேற்ற இந்த ஆறு, மேற்கு கடற்கரை நீர் போக்குவரத்து அமைப்பின் ஒரு பகுதியாகும். இதன் நீளம் 48 கிலோமீட்டர் (30 மைல்) ஆகும். மலையாள இலக்கியத்தின் தந்தை என அறியப்படும் துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் இந்த ஆற்றங்கரையில் பிறந்து வளர்ந்தார். இவரது நினைவைப் போற்றி "துஞ்சன் பரம்பு" என்றழைக்கப்படும் இவரது பிறந்த இடம் ஆற்றின் மிக அருகில் அமைந்துள்ளது. மேலும், இந்த இடம் பண்டைய தனூர் இராச்சியத்தில் (வேட்டத்துநாடு) அன்னரதேசம் என்றும், திரிக்கண்டியூர் அம்சம் என்று அழைக்கப்பட்டது. கவிஞரும் கேரள கலாமண்டலத்தின் நிறுவனருமான வள்ளத்தோள் நாராயண மேனனும்,இடைக்கால கேரள வானியல், கணிதப் பள்ளியின் முக்கிய உறுப்பினரான, மேல்பத்தூர் நாராயண பட்டத்திரியும் திரூர் ஆற்றின் அருகே பிறந்தவர்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malappuram - Important Rivers". National Information Centre. பார்க்கப்பட்ட நாள் 2006-10-13.
- ↑ "Tirur River". International EcoTourism Club. பார்க்கப்பட்ட நாள் 2006-10-13.
வெளி இணைப்புகள்
[தொகு]- Malappuram
- Tirur River
- Road Over Bridge at Tirur Inaugurated பரணிடப்பட்டது 2009-03-05 at the வந்தவழி இயந்திரம்