கோவளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Kovalam
—  city  —
Kovalam
இருப்பிடம்: Kovalam
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 8°18′N 77°12′E / 8.3°N 77.2°E / 8.3; 77.2ஆள்கூறுகள்: 8°18′N 77°12′E / 8.3°N 77.2°E / 8.3; 77.2
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் திருவனந்தபுரம் மாவட்டம்
ஆளுநர் ப. சதாசிவம்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி Kovalam
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கோவளம் என்பது கேரளத்தில் உள்ள அரபிக் கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் திருவனந்தபுரத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கோவளம் திருவிதாங்கூர் மகாராசாவினால் புகழ்பெறச்செய்யப்பட்டது. மேலும் ஃகிப்பிகள் பலர் இங்கு வரத்துவங்கியதில் இருந்து இது மேலும் புகழ் பெற்றது.

கடற்கரைகள்[தொகு]

கோவளம் தன் 17 கி.மீ கடற்கரையில் அருகருகே மூன்று கடற்கரைகள் மூன்று கடற்கரைகள் பிறிவடிவில் அமைந்துள்ளது.

கலங்கரை விளக்கம் கடற்கரை

தெற்கே உள்ள கடற்கரை கலங்கரை விளக்க கடற்கரை ஆகும். இந்தக் கடற்கரையே சுற்றுலாப் பயணிகளால் அதிகம் ஈர்க்கிறது. குரும்கல் மலையின் உச்சியில் 35 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பழைய விழிஞ்சம் கலங்கரை விளக்கம் காரணமாகவே இந்த கடற்கரைக்கு இந்தப் பெயர் வந்தது. கோவலத்தின் மூன்று கடற்கரைகளில் கலங்கரை விளக்கக் கடற்கரையே பெரியதாகும். கலங்கரை விளக்கம் கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது, சிவப்பு மற்றும் வெள்ளை பட்டைகளில் வண்ணம் பூசப்பட்டு 118 அடி உயரத்தைக் கொண்டுள்ளது.[2]

ஹவா கடற்கரை

ஈவா'ஸ் பீச், பொதுவாக ஹவா பீச் என்று அழைக்கப்படுகிறது. இது மீனவர்கள் கடலுக்குச் சுறுசுறுப்பாக செல்லும் இடமாகும். உயர்ந்த பாறையும், நீல நீரின் அமைதியான விரிகுடா கொண்ட இந்தக் கடற்கரை நிலவொளி இரவுகளில் ஒரு தனித்துவமான சொர்கத்தை உருவாக்குகிறது.

சமுத்ரா கடற்கரை

கடலில் நீட்டிச் செல்லும் ஒரு பெரிய மலையின் முனையானது இந்தப் பகுதியை தெற்குப் பக்கத்திலிருந்து பிரிக்கிறது. இதனால் சமுத்ரா கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் மிகுதியாக வருவதோ அல்லது பரபரப்பான வியாபாரமோ இல்லை. உள்ளூர் மீனவர்கள் இந்த பகுதியில் தங்கள் வர்த்தகத்தை நடத்துகிறார்கள்.

இந்தக் கடற்கரை அசோகா கடற்கரைக்கு வடக்கே தான் உள்ளது என்றாலும், கோவளம் சந்திப்பிலிருந்துதான் இங்கு செல்ல முடியும். கடும் அலைகள் அடித்து புரளும் கடற்கரை இது. இங்குள்ள கடலோர மதில் சுவரில் நடந்து சென்றால் அலைகள் சுவறில் மோதிச் சிதறுவதைக் காண இயலும். ஆனால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

நூற்றுக்கணக்கான மீட்டர் நீளமுள்ள ஆழமற்ற நீர் நீச்சலுக்கு ஏற்றது. கடற்கரைகள் பனை ஓலையால் வேய்ந்த கடைகளை வரிசையாக கொண்டுள்ளன. அவை அனைத்து வகையான பொருட்களையும் சேவைகளையும் வழங்கும் கடைகளாக உள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவளம்&oldid=3178908" இருந்து மீள்விக்கப்பட்டது