அஷ்டமுடி ஏரி
அஷ்டமுடி ஏரி | |
---|---|
அமைவிடம் | கொல்லம், கேரளா |
ஆள்கூறுகள் | 8°59′N 76°36′E / 8.983°N 76.600°E |
வகை | Endorheic உப்புநீர் |
வடிநிலப் பரப்பு | 1,700 km2 (660 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச ஆழம் | 6.4 m (21 அடி) |
நீர்க் கனவளவு | 76,000,000,000 km3 (1.8×1010 cu mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 10 m (33 அடி) |
உறைவு | 19 ஆகஸ்டு 2002 |
அஷ்டமுடி ஏரி (Ashtamudi Lake) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இரண்டாவது ஆழமான மற்றும் பெரிய ஏரியாகும். அஷ்டமுடி என்பதற்கு எட்டு மகுடம் என்று மலையாளம் மொழியில் பொருள். (அஷ்டம்=எட்டு , முடி= மகுடம்) . இந்த ஏரியை மேலே இருந்து பார்த்தால் பல்வேறு கிளைகளுடன் எட்டு மகுடங்களைக் கொண்டுள்ளது போல் தோற்றமளிக்கும். மேலும் இது கேரளாவின் கழிமுகங்களின் (காயல்) நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.[1][2][3][4] இக்கழிமுகத்தின் இருபுறங்களிலும் தென்னை மற்றும் பனை மரங்கள் உள்ளன. இவற்றினூடே கிராமங்கள் அமைந்துள்ளன. கொல்லம் படகுச் சங்கம் மூலம் இயக்கப்படும் படகுகள் பொதுமக்களின் சவாரிக்காக இக்கழிமுகத்தில் இயக்கப்படுகிறது. இதைத்தவிர சொகுசுப் படகுகளும் இயக்கப்படுகின்றன. இச் சொகுசுப் படகில் பயணம் 8 மணி நேரங்கள் ஆகும். இச்சொகுசுப் படகானது காயல்கள், மற்றும் கிராமங்களின் வழியாகச் செல்லுவதால் அக்கழிமுகத்தின் சுற்றுப்புறங்களை முழுவதும் ரசிக்க முடியும்.
வர்த்தகம்
[தொகு]இந்த ஏரி இப்பகுதி மக்களின் முக்கிய வருவாய்த் தலமாக அமைந்துள்ளது. மீன்பிடித்தல் மற்றும் தென்னை நார்க் கயிறு தயாரித்தல் ஆகியவை இந்த ஏரியைச் சார்ந்து நடக்கும் தொழில்களாகும்.
சுற்றுலா
[தொகு]இந்த ஏரியில் படகுச் சவாரி முக்கிய சுற்றுலா ஆகும். மேலும் சொகுசுப் படகுகளும் முக்கிய சுற்றுலாவாக அமைகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.hotelskerala.com/ashtamudi/facilities.htm பரணிடப்பட்டது 2008-06-02 at the வந்தவழி இயந்திரம் Back water Retreat Ashtamudi
- ↑ http://www.wwfindia.org/about_wwf/what_we_do/freshwater_wetlands/our_work/ramsar_sites/ashtamudi_lake.cfm பரணிடப்பட்டது 2007-12-17 at the வந்தவழி இயந்திரம் Ashtamudi Lake
- ↑ http://www.kerenvis.nic.in/water/Ramsar%20cites.pdf
- ↑ "The List of Wetlands of International Importance" (PDF). The Secretariat of the Convention on Wetlands (Ramsar, Iran, 1971) Rue Mauverney 28, CH-1196 Gland, Switzerland. Archived (PDF) from the original on 2008-01-02. பார்க்கப்பட்ட நாள் 2008-01-07.
புகைப்படங்கள்
[தொகு]-
கழிமுகத்தில் சூரிய அஸ்தமனம்
-
கழிமுகம்
-
கழிமுகத்தில் படகு
-
ஏரி கடலோடு சேருமிடம்
-
ஏரியில் உலாவும் வாத்துகள்
-
சொகுசுப்படகு
-
சீன மீன்பிடி வலை
-
கழிமுகத்தில் படகு