அச்சன்கோவில் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அச்சன்கோவில்
Achencoivil river.jpg
மூலம் மேற்குத் தொடர்ச்சி மலைகள்
வாய் அரபிக்கடல்
நீரேந்துப் பகுதி நாடுகள் இந்தியா
நீளம் 128 கி.மீ

அச்சன்கோவில் ஆறு (Achankovil River) இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள ரிஷிமலை நதி, பசுக்கிடமேட்டு ஆறு மற்றும் ரமக்கல்டேரி ஆறுகள் எனும் மூன்று ஆறுகளும் இணைந்து உருவான ஆறு. கேரள மாநிலத்திலுள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தின் செழுமையான வளர்ச்சிக்கு இந்த நதியே காரணமாகவுள்ளது. இந்த நதி கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் வீயபுரம் என்ற இடத்தில் உள்ள இந்து சமய மக்களின் புனித நதியாகக் கருதப்படும் பம்பா நதியுடன் இணைகிறது.

நதியால் பயன்பெறும் நகரங்கள்[தொகு]

இந்த அச்சன்கோவில் நதியின் கரையில் உள்ள நிலங்களின் செழிப்பால் இந்நதிக்கரையில் பல தன்னாட்சி நகரங்கள் அமைந்துள்ளன. இந்நகரங்களில் பத்தனம் திட்டா நகரமும் ஒன்றாகும. இந்நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது.

பத்தனம் திட்டா என்ற சொல்லானது மலையாள மொழிச் சொற்களான பத்தனம் மற்றும் திட்டா என்ற சொற்களில் இருந்து உருவானதாகும். அதாவது "நதிக்கரையில் அமைந்த வீடுகள்" என்ற பொருள் உடையதாகும்.

வேறு சில நகரங்கள்[தொகு]

இந்த நதிக்கரையில் அமைந்துள்ள மேலும் சில நகரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சன்கோவில்_ஆறு&oldid=2266691" இருந்து மீள்விக்கப்பட்டது