கண்ணாடிப்புழா
கண்ணாடிப்புழா தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ஓர் ஆறு. இது அம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளுள் ஒன்று. ஆனைமலையின் அடிவாரத்தில் பிறக்கும் இவ் ஆறு, பாலக்காடு நகரின் தென்எல்லையை ஒட்டிப் பாய்ந்து பின் பாரதப்புழையுடன் சேர்கிறது.