உப்பாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உப்பாறு என்பது இந்தியாவில் தமிழகத்தின் தாராபுரம் தாலுகாவிலுள்ள குடிமங்கலம் ஒன்றியம் அரசூர் பகுதியில் துவங்குகிறது. ஆமந்தகடவு, பெரியபட்டி, பூளவாடி உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக செல்கிறது. இந்த ஆற்றுக்கான உப்பாறு அணை பனமரத்துப்பாளையம் கிராமம், கெத்தல்ரேவ் பகுதியில், 1,100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் 500 கிலோ முதல் 800 கிலோ வரை தினமும் மீன் பிடிக்கப்படுகிறது.

உப்பாறு அணை[தொகு]

தாராபுரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் - கெத்தல்ரேவ் - பனமரத்துப்பாளையம் கிராமத்தில் உள்ளதுதான் உப்பாறு அணை. முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உப்பாற்றின் குறுக்கே 1100 ஏக்கரில்,இந்த அணை கட்டப்பட்டது. 1965 -ல் தொடங்கி 1968 -ல் கட்டி முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 30 அடி. நீளம் 2,300 மீ . நீர்பிடிப்பு பகுதி 350 ச.மைல்கல் ஆகும். அணையின் மூலம் நேரடியாக 6100 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக 15,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இரண்டு கால்வாய்கள் உண்டு.

இந்த அணை நிறைந்து வெளியேறும் நீர் - அமராவதி ஆற்றுடன் இணைந்து, காவரி ஆற்றுடன் வங்கக்கடலில் கலக்கும். P.A.P பாசன திட்ட அணைகளில் இதுவும் ஒன்று ஆகும். P.A.P. தொகுப்பு அணைகள் அனைத்தும் நிரம்பிய பின் வெளியேறும் உபரி நீர், வீணாக அரபிக்கடலில் கலந்து வந்தது. இந்த உபரி நீரை வீணாக்காமல் பயன்படுத்தும் வகையில் உப்பாற்றின் குறுக்கே அணைகட்டி, அந்த உபரி நீர் சேமிக்கப்பட்டு பாசனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்காலத்தில் பல்வேறு குளறுபடிகளால் P.A.P முக்கிய தொகுப்பு அணைகளே நிரம்புவதில் இடர்பாடுகள் உண்டு. மேலும் 1994-ல் இந்த பாசனப்பகுதிகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு விட்டது. அத்தோடு இந்த உப்பாறு அணைக்கு வரும் உபரி நீர் நின்று போனது. அன்றிலிருந்து இந்த அணையை நம்பி இருந்த சுமார் 22,000 ஏக்கர் நிலங்களின் விவசாய நிலை கேள்விக்குறியானது. கடந்த வடகிழக்கு பருவமழையின் போது திருமூர்த்தி அணை நிரம்பி பாலாற்றில் வீணாக நீர் திறக்கவேண்டிய கட்டாயத்துக்கு அணை நிருவாகம் தள்ளப்பட்டபோது. வேறு வழி இன்றி உப்பாறு அணைக்கு சில நாள் நீர் திறக்கப்பட்டது.

இன்னும் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் இந்த அணையில் விளையும் மீன் தனி சுவை கொண்டது. அணையில் நீர் இருந்தால் தினமும் 500 கி.மீன் பிடிக்கப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பாறு&oldid=2468929" இருந்து மீள்விக்கப்பட்டது