ஆனை மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆனை மலை
Chinnar Wildlife Sanctuary.jpg
சின்னார் வனவிலங்கு காப்பகம்
உயர்ந்த இடம்
உயரம் 2,695 மீ (8 அடி)
முக்கியத்துவம் ஆனைமுடி (மலை)
ஆள்கூறு 10°22′N 77°07.5′E / 10.367°N 77.1250°E / 10.367; 77.1250
புவியியல்
அமைவிடம் கேரளம் & தமிழ்நாடு
மலைத்தொடர் மேற்குத் தொடர்ச்சி மலை
Topo map (Terrain)
Geology
பாறையின் வயது Cenozoic
100 to 80 mya
மலையின் வகை Fault [1]
Climbing
Easiest route கேரள மாநில நெடுஞ்சாலை 17 = old rt. 4

ஆனை மலை என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பரவியுள்ள மலைத்தொடராகும். இதன் உயரமான முடி ஆனைமுடி ( 2, 695 மீ (8, 842 அடி)) ஆகும் இது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதுவே இமயமலைத்தொடரில் அல்லாத இந்தியாவின் உயரமான முடி ஆகும்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இடைவெளி ஏற்படுத்தும் பாலக்காட்டு கணவாயின் தென் புறத்தில் இம் மலைத்தொடர் அமைந்துள்ளது. இதுவும் நீல மலைத்தொடரும் இணைந்த பகுதியில் தான் மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் இணைகின்றன. இதன் தென் மேற்கே கேரளாவும் தென் கிழக்கில் ஏலக்காய் மலைகளும் கிழக்கில் பழனி மலைகளும் எல்லைகளாக உள்ளன. இதன் வனப்பகுதி ஆனது உயரமான பகுதிகளில் தேக்கு மர வளர்ப்பின் காரணமாகவும் உயரம் குன்றிய கீழ் பகுதிகளில் காப்பி மற்றும் தேயிலை வளர்ப்பின் காரணமாகவும் பல துண்டுகளாக்கப்பட்டுள்ளது.

பல ஆறுகள் இப்பகுதியில் உற்பத்தியாகின்றன. ஆழியாறு, சின்னாறு, பாம்பாறு, பரம்பிக்குளம் ஆறு ஆகியவை அவற்றுல் சிலவாகும். பல அணைகளும் இங்குள்ளன. ஆழியாறு அணை, அமராவதி அணை, சோலையாறு அணை, நீராறு அணை, பரம்பிக்குளம் அணை ஆகியவை அவற்றுல் சிலவாகும்.

ஆனைமலை வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை 17

தமிழ்நாட்டின் உடுமலைப்பேட்டையையும் கேரளாவின் மூணாறையும் இணைக்கும் கேரள மாநில நெடுஞ்சாலை 17 ஆனைமலையின் வழியாக செல்கிறது.


மேற்கோள்கள்[தொகு]

  1. Archaean continental collision
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனை_மலை&oldid=2416484" இருந்து மீள்விக்கப்பட்டது