ஏலகிரி மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏலகிரி மலை
—  நகரம்  —
ஏலகிரி ஏரி
ஏலகிரி மலை
இருப்பிடம்: ஏலகிரி மலை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°34′41″N 78°38′27″E / 12.578104°N 78.640737°E / 12.578104; 78.640737ஆள்கூறுகள்: 12°34′41″N 78°38′27″E / 12.578104°N 78.640737°E / 12.578104; 78.640737
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


1,048 மீற்றர்கள் (3,438 ft)

ஏலகிரி (Yelagiri) என்னும் மலைவாழிடம் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ளது[3]. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,410 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர்[4].

கண்ணோட்டம்[தொகு]

ஏலகிரி மலை, ஊட்டி மற்றும் கொடைக்கானல் போல் ஒரு வளர்ச்சியுற்ற சுற்றுலாத் தலமாக இல்லாவிடினும், சாகச விளையாட்டுகளான ஏவூர்தி நழுவுதல் மற்றும் மலையேற்றம் போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் இதனைச் சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன[5]. ஏலகிரியில் 14 சிறு கிராமங்களும், சில கோவில்களும் அரசு மூலிகை மற்றும் பழ பண்ணைகளும் அழகுற அமைந்துள்ளன. அடிப்பகுதி வட்டவடிவமாகவும் பக்கவாட்டில் செங்குத்தான பாறைகளையும் கொண்டு பார்ப்பதற்கு ஒரு பீடபூமி போல இம்மலை காட்சியளிக்கிறது. மலையின் வடக்கு மற்றும் வடகிழக்குச் சரிவுகளிலும் , மலை உச்சியிலும் பசுமைமாறா மரங்கள் காணப்படுகின்றன. பொதுவாக இம்மலைப்பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 31 பாகை செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 11 பாகை செல்சியசும் பதிவாகிறது.

ஏலகிரி மலைக்குச் செல்லும் வசதி[தொகு]

ஏலகிரி மலைக்குச் செல்லும் சாலை

வேலூர், சென்னை, சோலையார் பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து ஏலகிரி மலைக்கு பேருந்துகள் உண்டு. அருகில் 19 கி.மீ தொலைவில் சோலையார் பேட்டை இரயில் நிலையம் உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 219 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூரு விமானநிலையத்தில் இருந்து 193 கி.மீ தொலைவிலும் ஏலகிரி மலை அமைந்துள்ளது.

மக்கள்[தொகு]

சுமார் 200 முதல் நானூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் இம்மலையில் வாழ்ந்து வருகின்றனர். இன்று சுமார் 4000 பேர் இம்மலை முழுவதுமாக விரவியுள்ளனர். மக்களில் பெரும்பாலானவர்கள் இந்து சமயத்தைச் சேர்ந்த வெள்ளாளர்கள் எனப்படும் மலைவாழ் மக்களாக உள்ளனர். இருளர்கள் என்று அழைக்கப்படும் மலைவாழ் குழுக்களும் இங்குள்ளனர். ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த திப்பு சுல்தான் படையைச் சேர்ந்த போர் வீரர்கள் இப்பீடபூமியில் குடியேறி வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

சுற்றிப்பார்க்க[தொகு]

சலகாம்பாறை நீர்வீழ்ச்சி[தொகு]

ஏலகிரி மலையில் உள்ள அட்டாறு நதி சடையனூர் என்ணுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவி சலகம்பாறை நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக நதி வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. நிலாவூரில் இருந்து 6 கி.மீ மலைப் பயணத்தின் மூலமாக நீர்வீழ்ச்சியை அடையலாம். சிவலிங்க் வடிவத்தில் ஒரு முருகர் கோவில் நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ளது.

பூங்கானூர் ஏரி மற்றும் குழந்தைகள் பூங்கா[தொகு]

பூங்கானூர் ஏரி 56706 சதுரமைல் அளவிற்கு பரப்பளவு கொண்டது. 10 முதல் 20 அடி ஆழம் வரையுள்ள இவ்வேரியின் தண்ணீர் கொள்ளளவு 4.88 மில்லியன் கன அடி ஆகும். ஏரியைச்சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய பூஞ்செடிகளும் விளையாட்டுக் கருவிகளும் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.பூங்கா காலை 6 மணி முதல் மாலை ஆறுமணி வரை திறக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு ரூ5 நுழைவுக் கட்டணம் என்றும் பெரியவர்களுக்கு ரூ 15 நுழைவுக்கட்டணம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிட படகு சவாரிக்கு கட்டணமாக துடுப்பு படகிற்கு ரூ20, கால்மிதி படகிற்கு ரூ50 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • இயற்கைப்பூங்கா
  • முருகன் ஆலயம்
  • தொலைநோக்கி இல்லம்
  • நிலாவூர் ஏரி மற்றும் பூங்கா
  • ஆஞ்சநேயர் ஆலயம்
  • மங்கலம் தாமரைக்குளம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

காட்சியகம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏலகிரி_மலை&oldid=1839934" இருந்து மீள்விக்கப்பட்டது