தீக்காக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீக்காக்கை
Male Malabar Trogon (crop).jpg
Male H. f. malabaricus
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Trogoniformes
குடும்பம்: Trogonidae
பேரினம்: Harpactes
இனம்: H. fasciatus
இருசொற் பெயரீடு
Harpactes fasciatus
(Pennant, 1769)
Malabar trogon map.png
வேறு பெயர்கள்

Harpactes malabaricus

தீக்காக்கை மலபார் தீக்காக்கை என்றும் அழைக்கப்படுகிறது. இது வண்டுகுத்தி (trogon) எனும் இனத்தை சார்ந்தது. இலங்கை காடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை போன்ற மலைக் காடுகளில் காணப்படுகிறது. [2]

பெயர்கள்[தொகு]

ஆண்
பெண்

தமிழில்  :தீக்காக்கை

ஆங்கிலப்பெயர்  :Malabar Trogon

அறிவியல் பெயர் :Harpactes faciatus [3]

உடலமைப்பு[தொகு]

31செ.மீ.- பல வண்ணங்களில் அழகாகத் தோற்றம் தரும். இதன் தலைப் பகுதி புகைக் கருப்பாகவும், முதுகு மஞ்சள் தோய்ந்த பழுப்பாகவும், வயிறு இளஞ்சிவப்பாகவும் இருக்கும். மார்பிற்கும் வயிற்றிற்கும் இடையே வெள்ளைப்பட்டை உண்டு. பெண் பறவை படத்தில் உள்ளதுபோல மங்கிய நிறம் கொண்டது.

காணப்படும் பகுதிகள்[தொகு]

மேற்குத் தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கூடியது. மூங்கில் காடுகளிலும், இலையுதிர்காடுகளிலும் தரைக்கு வராது.

உணவு[தொகு]

கிளைகளிடையே தாவிப்பறந்து கம்பளிப் பூச்சி, வண்டு, வெட்டுக்கிளி, சில்வண்டு ஆகியவற்றை இரையாகப் பிடிக்கும். ம்யூவ் என்ற தனித்த குரல் ஒலிகொண்டு இது இருப்பதைத் தெரியலாம். முதுகுப் பக்கமே பார்ப்பவர்களுக்குத் தெரியும்படியாகக் கிளைகளில் அமரும் விசித்திரப் பழக்கம் உடையது. கிளைகளில் குப்புறத் தொங்கியபடியும் இலைக் கொத்துகளின் முன் இறக்கையடித்து பறந்தபடியும் பூச்சிகளைப் பிடிக்கும் பழக்கமும் உண்டு.

இனப்பெருக்கம்[தொகு]

பிப்ரவரி முதல் மே முடிய முறிந்த, காய்ந்த மரங்களின் பொந்துகளில் தரையிலிருந்து 6 மீ-க்கு உள்ளாக 2 முதல் 4 முட்டைகள் இடும்.

[4]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Harpactes fasciatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. பறவை 09: பறக்கும் தீப்பந்தம் தி இந்து தமிழ் திசை-சனி, செப்டம்பர் 14 2019
  3. "Malabar_trogon தீக்காக்கை". 30 செப்டம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:80
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீக்காக்கை&oldid=3634755" இருந்து மீள்விக்கப்பட்டது