அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அணைக்கட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேட்டூர் அணை, சேலம் மாவட்டம்

அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன. இவை பொதுவாக வெள்ள தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் நீர் மின்சக்தித் திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன.

பயன்கள்[தொகு]

 • வெள்ள அபாயத்தைக் குறைக்கிறது.
 • நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய உதவுகிறது.

நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும்

இடர்கள்[தொகு]

 • பெரும்பாலான இடங்களில் காடுகள் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
 • நீர்த்தேக்கப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள், காட்டு விலங்குகளின் வாழிடம் அழிக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள பெரிய அணைகள்[தொகு]

தமிழகத்தில் உள்ள பெரிய அணைகள்[தொகு]

மேட்டூர் அணை, ஆத்துப்பாளையம் அணை,[1]கல்லணை, வைகை அணை, தாமிரபரணி, அமராவதி அணை, மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை,பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை, பரம்பிக்குளம் அணை,ஆழியாறு அணை , பவானிசாகர் அணை, சாத்தனூர் அணை, நீரார் அணை, சோலையாறு அணை. மற்றும் தமிழரின் பெருமையை பறைசாற்றும் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது[2].

திருநெல்வேலி மாவட்ட அணைகள்[தொகு]

 1. பாபநாசம் அணை - மொத்த கொள்ளளவு 143 அடிகள்
 2. சேர்வலாறு அணை - 156 அடிகள்
 3. மணிமுத்தாறு அணை - 85<அடிகளுக்கும் மேல்(85<)
 4. குண்டாறு அணை
 5. வடக்கு பச்சையாறு அணை
 6. கொடுமுடியாறு அணை
 7. ராமநதி அணை
 8. கடனா நதி அணை
 9. அடவிநயினார் அணை

ஆதாரங்கள்[தொகு]

 1. "இந்தியா: பெரிய அணைகள் தேசிய பதிவுகள் 2009.". இந்தியா : தமிழ் நாட்டில் உள்ள அணைகள். பார்த்த நாள் நவம்பர் 222011.
 2. "கல்லணை இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது". தி இந்து (The Hindu) (இந்தியா). ஆகத்து 29 – 2011. http://www.thehindu.com/life-and-style/kids/article2408778.ece.  - ஆங்கிலத்தில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணை&oldid=2086702" இருந்து மீள்விக்கப்பட்டது