திரிபுராந்தகர்
திரிபுராந்தகர் (திரிபுர அந்தகர்) சிவனின் திருமூர்த்தங்களுள் (திரு உருவங்கள்) ஒன்று. இது பறக்கும் கோட்டைகளுடன் கூடிய மூன்று நகரங்கள் கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுர சகோதரர்களை (திரிபுரர்) அழிப்பதற்காக எடுத்த கோலம். தொன்மம்[தொகு]தேவர்கள் எல்லோரும் படைகளாகவும் சூரிய, சந்திரர்கள் சக்கரமாகவும், உலகம் தேராகவும் அமைய விஷ்ணுவை அம்பாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் கொண்டு சிவன் அவர்களை அழிக்கப் புறப்பட, தேவர்கள் தாம் இல்லாவிட்டால் ஈசனால் அவர்களை அழிக்க முடியாது என்று நினைக்க, செருக்குற்ற தேவர்களை அடக்க புன்முறுவல் பூத்து அச்சிரிப்பினாலேயே திரிபுரங்களை அழியச் செய்தருளினார். [1] வேறு பெயர்கள்[தொகு]
தமிழ் இலக்கியங்களில்[தொகு]பழந்தமிழ் இலக்கியங்களில் இம்மூர்த்தம் பற்றிய செய்திகள் உண்டு. பரிபாடலில் இறைவன் முப்புரம் எரித்த விரிசடைக் கடவுள் எனவும், புறநானூற்றில்[சான்று தேவை] திரிபுரம் எரித்தவரும் நஞ்சுண்டவரும் சந்திரனைச் சூடியவருமான சிவன் என்றும் கூறப்படுகிறது. கலித்தொகையிலும் சிலப்பதிகாரத்திலும் திரிபுரமெரித்த வரலாறு உள்ளது. தேவாரப் திருப்பதிகங்கள் திரிபுரம் எரித்த செயல், அதற்கான காரணம், வில்,நாண், தேர், தேவர்களுக்கும் அடியவர்களுக்கும் அருளியது பற்றிக் கூறுகின்றது. இக்கடவுள் கடைச்சங்கத்தில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் என்ற பெயரில் புலவராய் இருந்து தமிழ் ஆய்ந்ததாக இறையனார் களவியல் உரை கூறுகிறது. கோவில்களும் கல்வெட்டுகளும்[தொகு]பல்லவ பாண்டிய மன்னர்களின் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் (கி.பி.7 - 9) இச் செய்தியைக் கூறுகின்றன. மன்னர்கள் போரில் வெற்றி பெறுவதற்கும், வெற்றிபெற ஊக்கமளித்ததற்கும் காரணமாக இருந்தது. இரண்டாம் பராந்தகன் “ஆற்றலில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபெருமானுக்குச் சமமானவன்” என்று சாசனச் செய்தி குறிப்பிடுகின்றது. கலை வடிவங்களில் மாமல்லபுர சிற்பம் வடக்குச்சுவர், கொடித்தூண், காஞ்சி கைலாசநாத கோயில் சிற்பம், வடக்குச்சுவர், சோழர்கால கோயில்களின் தேவகோட்டங்கள், நாயக்கர் காலத்தில் தூண்கள் என்பவற்றில் காணலாம்.
திருநல்லம் கோணேரிராசபுரம் கோயிலுக்கு செம்பியன் மாதேவி திரிபுராந்தகரையும் தேவியையும் செப்புத்திருமேனியாக வழிபாட்டிற்காகத் தானமளித்திருக்கிறார். இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
|