கஜாந்திக மூர்த்தி
Appearance
கஜாந்திக மூர்த்தி என்பவர் அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். சூரபத்மன் முருகன் போரில் தேவர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது தேவர்களுடன் ஐராவதமும் போரில் சண்டையிட்டது. பானுகோபனின் தாக்குதலால் ஐராவதம் தன்னுடைய தந்தத்தினை இழைந்தது. போர்முடிந்ததும் தேவலோகம் சென்ற ஐராவதம் தன்னுடைய அழகையும், வலிமையும் புதிப்பிக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து வரங்களைப் பெற்றது. திருவடிவக் காரணம்[தொகு]ஐராவதம் எனும் இந்திரனின் யானையானது, போரில் படுகாயமுற்று பின்வாங்கியமைக்காக வருந்தியது. எனவே திருவெண்காடு வந்து சிவபெருமானை வணங்கியது. சிவபெருமான் ஐராவத்தின் வேண்டுதலை கண்டு மகிழ்ந்து ஐராவதத்தின் உடைந்த கொம்பினை சரிசெய்து, மனவருத்ததினை நீக்கினார். [1] கோயில்கள்[தொகு]
இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |